Saturday, 4 April 2020

விளக்கேற்றுவது முக்கியமில்லை, விளங்கிகொள்வது தான் முக்கியம்!!!

asato ma sadgamaya
tamaso ma jyotirgamaya
mrtyorma amrtam gamaya
om shanti shanti shanti.
Om Peace Peace Peace.

The Brhadaranyaka Upanisad - 1.3.28


"asato ma sadgamaya"

Lead me from the asat to the sat.
உண்மையற்றதை நீக்கி உண்மையை பரப்பு!

"சத்"... "சத்தியம்"... "சத்குரு" என்றெல்லாம் கேட்டிருப்போம்...

"சத்" என்றால் உண்மை...
Truth, Real, Accurate...
"அ-சத்" என்றால் உண்மையில்லாத, பொய்யான....

"tamaso ma jyotirgamaya"

Lead me from darkness to light.
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல்!!

"தாமதம்" என்ற வார்த்தை கேட்டிருப்ப்போம்....
Late, Not on Time... காலம் கடத்துவது, மந்த குணம்.
வேதம் "தமஸ்" என்பதை "இருள்" என்கின்றது, இது பல பொருள் படும்... மந்த நிலை, இயங்கா நிலை, சோம்பல்....

"mrtyorma amrtam gamaya"

Lead me from death to immortality.
மரணத்திலிருந்து மரணமில்லா நிலையை உருவாக்கு!!!

"அமிர்தம்" என்று "தேவாமிர்தம்" என்று கேட்டிருப்போம்.அது மரணத்தை தடுக்கும் என்று கதைகளில் வரும்...

"மிருத்யூ" என்றால் மரணம், "அ-மீர்த்யூ" என்றால் மரணமின்மை...

அதாவது "Theism - Atheism" or "Political-Apolitical" or "Archy - Anarchy"
இல்லை "தர்மம் - அதர்மம்" அது போல...

சரி விஷயத்துக்கு வருவோம்.

அப்போ எது "அமிர்தம்"??
Eternal, Absolute, Permanence??

முதல், நாம் வழிபடும் கடவுளின் உருவம் நிலையானதா?? உறுதியானதா??
மலையையும், ஆற்றையும் வழிபட்ட நாம் கல்லை வழிபட துவங்கினோம், பின்  நிழற்படத்தை, புகைபடதை வணங்குகின்றோம்... எதிர்காலத்தில் மெய்நிகர் உருவத்தை (Virtual Image, Augumented Image) வழிபட வாய்ப்புகள் உண்டு!!

அதுவே உறுதியில்லாத போது, கடவுள் மறுப்பையே மதமாக கடைபிடிப்பவர்களை எண்ணிபார்க்க தோன்றுகிறது!!! (Self-Righteous)

இரண்டு, மதம் உறுதியானத?? நிலையானதா??

அது மாதம்-மாதம் மாறும் தன்மை கொண்டது, பல குருக்கள், சன்யாசிகள், யோகிகளும் இன்றும் தொகுக்கப்பட்ட வேதத்தை, உபனிடத்தை புதுப்பித்து, சீர்திருத்திய வண்ணமே உள்ளார்களே!! (Religious Reforms)

மூன்று, நம் பழக்க வழக்கம்
மேன்மையானதா??
நிலையானதா?? உறுதியானதா??

இல்லை... அதில் மூட-நம்பிக்கைகள் உள்ளது, அது மாற்றத்திற்குறியது.

ஆனால் நாம் அறிவியலையே கண்மூடி தனமாக நம்புகின்றோமே!!
"அறிவியல்" என்பது இயற்கை பற்றிய நம் புரிதல் மட்டுமே (Study about the Nature), அது அந்த இயற்கையே ஆகாது!! (Not Absolute)

நான்கு, நமக்கு பிரச்சனை ஒருவரின் மாற்று சிந்தனையாக இருக்கலாம், சித்தாந்தமாக இருக்கலாம்.

ஆனால் நாம் வன்மத்தை, வெறுப்பை, கோபத்தை "தனி" மனிதனை நோக்கிதான் செலுத்துகின்றோம்.... அந்த மனிதன் நிலையான(Eternal) ஒன்றா??

எந்த ஒரு தனி மனிதனும் நிலையானதில்லை (Not Eternal)

ஒருவரை "பக்தாள்" என்று கூறிவிட்டு இன்னொருவரை "ஆண்டவர்" என்கின்றோம். (Self-Contradiction)

என்னை பொருத்தவரை... உனக்குள் உள்ள அதே அறிவு எல்லொருக்குள்ளும் உள்ளது... அந்த அறிவு தான் நிலையானது. #KnowledgeisEternal

திக தோழர் திரு சுப.வீ. கூறுவது போல...
"வழிபாடாக பார்க்காமல், வழிகாட்டுதலாக பார்க்க வேண்டும்"
(Think beyond Symbolism)

விளக்கேற்றுவது முக்கியமில்லை, விளங்கிகொள்வது தான் முக்கியம்!!!


om shanti shanti shanti.
Om Peace Peace Peace.


Reference:
The Brhadaranyaka Upanisad - 1.3.28"பிருஹதாரண்யக உபநிஷத்" என்ற தலைப்பு "பெரிய வனப்பகுதி Greater Wilderness அல்லது காடு உபநிஷத் Forest Upanishad" என்று பொருள்படும்.

தொகுத்தவர் முனிவர் யஜ்னாவல்க்யா.

The Brihadaranyaka Upanishad was in all likelihood composed in the earlier part of 1st millennium BCE, around 700 BCE, give or take a century or so, according to Patrick Olivelle.

------- End -------

பிரதமரின் அழைப்பு குறித்து என் பார்வை கீழே....




விளக்கு வையுங்கள் என்று சொல்ல பிரதமர் எதற்கு??

"விளக்கு வைங்கள்" என்பது அதிகார பூர்வ அறிவிப்பா?? என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்... #NotinOfficialCapacity

பிரதமர் அழைக்கின்றார் என்பது ஊடகங்கள் உருவாக்கும் தோற்றம்,  நம் பெரும்பாலானோர் புரிதலும் அவ்வளவே....

அது பிரதமரின் அறிவிப்பு என்பதைவிட... நரேந்திர தாமோதர் மோடி என்ற ஒருவரின் #Twitter அழைப்பு.... அவரை போல் பலர் தனது பதவி, பெயர், புகழ் பெற்ற பிரபலங்களின் அழைப்பை பலரும் ஏற்க வாய்ப்புள்ளது தானே?? #InfluentialCelebrities

அவரும் தன் பங்குக்கு நாம் தெறிவிக்கும் கருத்து போல ஒரு கருத்தை சொல்கின்றார்... #SocialMediaAddiction

அவரது சமூக வளைதல பதிவுகளின் வரலாற்றை நோக்கினால் சில நோக்கங்களை கணிக்க முடியும்!!



என் அறிவுக்கு புலப்பட்டது...

"United Spirit despite of Social Distancing" Objective what I could deduce...

INDIA FIGHT AGAINST CORONA

ஒற்றுமைக்கு என்ன அவசியம் என்று கேள்வி கேட்டு பதிவு போட்டு அடுத்து என்ன ஏளனம் செய்யலாம் என்று ஓடிகிட்டே இருக்கு இங்க ஒரு கூட்டம்...

ஒற்றுமைக்கு என்ன பங்கம் என்று கடந்த இரண்டு நாள் நம் எல்லோரது சமூக வளைதல பதிவுகளையே பார்த்தால் தெரியும்...

ஹிந்து-முஸ்லீம் வெறுப்பு, வெறியேற்றும் பதிவுகள்...

இவன் அவன குத்தம் சொல்லுறான், அவன் இவன சொல்லுறான்... இதுக்கு நடுவுள சிலர் ஒருத்தருக்கு ஆதரவு காட்டுறேன் பேர்வழி என்று... வன்பத்தை, வன்முறையை, வெறியை, பிரிவினையை பரப்பியதை நாம் நினைவுக்கூறமுடியும்... இதன் எதிர்வினை எல்லா சமூக வளைதலங்களில் பார்க்க முடிந்தது... மத வெறியர்களின் Tik Tok பதிவுகளும் சான்று!!

இன்று அந்த மத-வெறி, மத-பிரிவினை பதிவிட்ட எல்லாக்கூட்டமும்
இன்று "ஒற்றுமைக்கு என்ன பங்கம்??" .. என்றும் "ஒன்பதின் சக்தி தெரியுமா??" என்றும் நிலைக்கு மடைமாற்றப் பட்டுள்ளது...

ஆமாம், மின் விளக்குகளுக்கும், மின் சாதணங்களுக்கும் வேறுபாடு தெரியாம பதிவும் போடுகிறார்கள்!! அதை ஒரு முன்னெச்சரிக்கையாக கொள்ளலாம்.

No comments:

Post a Comment