தலைப்பு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்யும் முட்டாள் கூட்டத்திற்கு நடுவில் தான் நாம் இன்று வாழ்கிறோம்.
கடந்த வருடம் செய்திதாள்களில் வந்த ஒரு செய்தி....
"ஒன்பதாம் வகுப்பு கேள்வித் தாளில் சர்ச்சை: காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?"
இதை பார்த்து எனக்கு ஏற்பட்ட பகுத்தறிவு கேள்விகள்...
1. அச்சு பிழையா?
2. ஆசிரியரின் தவறா?
3. மொழிப்பெயர்ப்பு பிழையா?
4. வராலாற்றை சிதைக்க, காந்தியை அவமதிக்கும் கூட்டத்தின் வன்மமா?
முதல் அந்த பள்ளிகூட புத்தகத்தில் காந்திய பற்றி என் இருக்கு என்று தெரிந்தால் தான் முடிவுக்கு வரமுடியும். அதில் "தற்கொலை" பற்றி காந்தியின் கருத்து இருந்தால், இது அச்சு பிழையாக தான் இருக்க வேண்டும். இல்லை, அவர் "சத்திய சோதனை"யில் சொல்வது போல தான் சிறுவனாக தற்கொலைக்கு முயன்றதை பற்றி இருப்பின் அது கேள்வியின் பொருட்பிழை, ஆசிரியரின் தவறும் கூட!!
பாகுபாடுடைய அறிவிற்கு எதிர் கேள்விகள் தோன்றாது.
எனக்கு தெரிந்து, இதுவரை எந்த பத்திரிக்கையும் அந்த பள்ளிகூட பாடத்தின் நகலையோ, பிழையையோ பற்றி ஏதும் வெளியிடவில்லை!! (ஒரு செய்தியை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு மட்டுமே)
நீங்க முட்டாளாக இருக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு!! மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பதை கைவிடுங்கள்.
Be a Voice, Not an Echo!!!
No comments:
Post a Comment