Monday, 16 November 2020

மாறன்கள் சூரரை தூற்றுவதற்கு காரணம் என்ன?

மாறன்கள் சூரரை தூற்றுவதற்கு காரணம் என்ன?

மாறன் = மோறன் 

Moron: a stupid person.

கயவன் அல்லது மன வலிமையற்றவன்.

இவர்களுக்கு "சூரரை போற்று" படத்தின் மீது என்ன காழ்புணர்ச்சி?

சூரிய ஏற்று நடித்த கதாபாத்திரம் "ஏர்-டெக்கன்" விமான சேவையின் உரிமையாளர் கேப்டன் கோபிநாதன். அவர் பிறப்பால் பிராமணர். அதை குறிப்பிடும் வகையில்  சூர்யாவின் தந்தை ஒரு ஆசிரியராக (வர்னாசிரம புரிதல் படி ஆசான்கள் பிரமனர்) காட்டப்பட்டுள்ளது!!

நீங்கள் கூறுவது போல "சங்கி" மனோபாவமோ.. "பெரியாரிய" மனோபாவமோ...ஆரியமோ, திராவிடமோ... உங்களுக்கெல்லாம் பாதி மூளைதான் வேலை செய்யுமா என்ன??

தோசை கதை சொல்பவர் என்ன திடீரென திரைவிமர்சகராக மாரி விட்டார்?

OTT தளத்தில் படத்தை வெளியிட்டதால் தன் முதளாலிகளுக்கு ஏற்பட்ட நஷ்டமாக இருக்குமோ!!?

தன் விமான சேவை "வானத்தில் பறக்கும் ஒரு உடுப்பி ஓட்டல்" அதுவே கேப்டன் கோபிநாதின் கனவு!! உங்க முதளாலி சரவனாபவன் என்பதால் கேப்டன் அவர்களின் வார்தைகளை மாற்றியா பிரதிபளிக்க முடியும்??

"பெரியார்" என்று இதே போல ஒரு  Biopic திரைபடம். சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆதி திராவிட மஹா சபை துவங்கியவர். இந்த ஆண்டுகளில் நம்ம நாயகர் எங்க இருந்தார் என்பது நமக்கு வேண்டாம், 1939 இல் தான் தலைவர் த.நா. அரசியல் சீன்லய வராரு, அனால் அந்த படத்திடல் இரட்டைமலை என்று ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்து பெரியாரின் உதவியாளர் போல காட்டும் அயோக்கியதனத்தை காட்டிலும் இந்த Biopic படத்தில் பெரிய பிழையேதுமில்லை!!

1. வீரன், சூரன், சூரபதுமன்.

2. அசுரன், அரக்கன், இராட்சதன்.

3. நரகாசூரன்.

4. சூரசம்ஹாரம்.

5. சூத்திரன்.

இந்த எல்லா வார்தைகளையும், சொற்களையும் பின்னிபிசைந்து கதை சுற்றும் கும்பல் நம் அறிவையும், நம்மையும் வளரவே விடாது. 

தனிமனித வளர்ச்சியில் தான் சமுதாயத்தின் வளர்ச்சியும் உள்ளது!!

அதனை ஒரேதடியாக தன்முனைப்பு (Selfishness) எனறிடமுடியாது.

அரசாங்கமும், அமைச்சர்களும் கேப்டன் கோபிநாத் போன்றவர்கள் சாதிக்க உதவினார்கள் என்பதை இந்த படம் பெரிதும் வெளிபடுத்தவில்லை. 

தொழில் முனைவோர்களின் பிரட்சனை, சந்தை பொருளாதாரத்தின் முற்றுரிமை & நிறைவுப் போட்டி சிக்கல்கள். 

சாதி, மதம் இல்லை பணம்(முதலீடு) தான் முதல் பிரட்சனை. இரண்டாம் பிரட்சனை தன்னம்பிக்கை/விடாமுயற்சி.

சாதி, மதம் என்ற கூற்றுகளை, பார்வைகளை தவிர்த்து ஆகவேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துவதே சிறப்பு!!

For the Brave Hearts

No comments:

Post a Comment