சென்ட்ரல் விஸ்டா என்பது புது தில்லியின் ரைசினா குன்றில் அமைந்துள்ள இந்தியாவின் மத்திய நிர்வாக மையமாகும். இந்த பகுதியை புதுப்பிப்பதற்கான தற்போதைய மறுவடிவமைப்பைக் குறிப்பது தான் செண்ட்ரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டம் (Central Vista Redevelopment Project). பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் இந்த பகுதி வடிவமைக்கப்பட்டது, சுதந்திரத்திற்குப் பிறகு நிர்வாக பணிகளுக்காக இந்த பகுதி இந்திய அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டது
நாம் மெத்தப்படித்தவர், அறிவில் சிறந்தவர், பகுத்தறிவாளர் என்று எண்ணும் நபர்கள் கூட அரசியல் என்று வந்ததும் நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை முட்டாளாக்க பார்கிறார்கள். சசிதரூர்ரின் ட்வீடர்ப் பதிவு ஒரு உதாரணம். இவர் 2018 ஆம் ஆண்டு மலேசிய சுற்றுபயணம் பற்றி தன் ட்வீடர் பதிவில் "மலேசிய நாட்டு பாரளுமன்றம் பொறாமை ஏற்படுத்துவதாகவும், நமது பாரளுமன்றத்தின் கட்டமைப்பு குறைபாடுகள் எறாளமாக உள்ளதாகவும், தொழில் நுட்ப மேம்பாட்டு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். இன்று சென்ட்ரல் விஸ்டா தேவையா என்கிறார். அதுமட்டுமின்றி ரூ.20,000 கோடி நிதியை கோவிட் எதிரான செலவுகளில் சேர்கலாமே என்று பதிவிடுகிறார். ஐந்தாண்டு திட்டம், ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை, முதலீட்டு நிதி திரட்டுதல் என்பதை பற்றி அடிப்படை விவரம் தெரியாதவரா இவர்?
இந்த சென்ட்ரல் விஸ்டாவின் ரூ.20,000 கோடி என்பது கையியுள்ள நிதியில்லை, அது இந்த ஆண்டிற்குள்ளாக செலவிடவோ, திரட்டவோ கூடிய நிதியுமில்லை. இது அடுத்த ஆறு ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் திரட்டவும்- செலவிடவும் தோராயமாக கணகிடப்பட்டுள்ள தொகை மட்டுமே. அதாவது இந்த தொகையை ஆறாக பிரித்தால், சுருக்கமாக சராசரியாக இந்த திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 3000 கோடி செலவிடப்படலாம். இந்த நிதியாண்டு மருத்துவம், சுகாதாரம், என்று ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ரூ.35,000 கோடி கோவிட் தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்த பட்ஜட்டின் சுகாதார செலவினத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சென்ட்ரல் விஸ்டாவுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1339 கோடிகள் மட்டுமே (இது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.7% ஆகும்)
பாராளுமன்ற கட்டிடத்தை புணரமைக்க அவசியம் குறித்து பலரும் பல்வேறு சமயங்களில் குறிப்பிட்டிருந்தனர். 2012 ஜூலை திருமதி மீனாக்குமார்(Speaker, Lok Sabha) , 2015 டிசம்பர் திருமதி சுமித்ரா மாஜன் மற்றும் 2019 ஆகஸ்ட் திரு ஓம் பிர்லா. இவர்கள் குறிப்பிட்ட காரணங்களில் பிரதானமானது, போதுமான இருக்கை வசதியின்மை, குறிப்பாக 2026க்கு பின் மாநிலங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை சீரமைத்தல், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, 90 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்,.....
பாராளுமன்ற கட்டிடம் என்பது இந்த சென்ட்ரல் விஸ்டா
திட்டத்தின் ஒரு அங்கம் மட்டுமே. இந்த திட்டத்தின் நோக்கம் மத்திய அரசின் அலுவலக அமைப்புகளை, பாதுகாப்பை, நிர்வாக மையங்களை மேம்படுத்துவதாகும்.
சரி, பாராளுமன்றத்தை புதுபிக்க தேவையான முக்கி காரணங்களை முதலில் இங்கு காண்போம். கட்டிடவியல், புவியியல் சார்ந்த தேவைகள் குறித்து, பாதுகாப்பு தேவைகள் குறித்து அறிய கட்டிடவியல் நிபுணர் இந்த செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் வடிவமைப்பாளர் திரு பிம்பல் பட்டேல் அவர்களின் காணொலி விளக்கவுரையை கேட்கவும்.
இணைப்பு: https://youtu.be/vX3d5RO8H1M
பாராளுமன்ற புணரமைப்பதில் உள்ள பொருளாதார, அரசியல் காரணிகளை விரிவாக காண்போம்.
1946 நவம்பர், மாகாணங்கள் மற்றும் சுதேச மாநிலங்களுக்கு அரசியலமைப்புக் குழுவில்அந்தந்த மாநிலங்களின்
மக்கள்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப 1: 1மி, அதாவது ஒரு மில்லியன்
(10 லட்சம்)
மக்களுக்கு
ஒருவர் என்று பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டன.
மாகாணங்கள் 292 உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்,
அதே சமயம் சுதேச மாநிலங்கள் குறைந்தபட்சம் 93 பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இதே போன்று
1950 அரசியலைப்பு சட்டம் நேரடி தேர்தல்களை
நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்குள் எல்லைகளை தொகுதிகளை பிரிக்க வழி வகுத்தது. அதன் அடிப்படையில்
மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. (Refer: Delimitation Commission
1952, 1962, 1972, 2002). இதில் இருந்த இரண்டு விதிகள் மாநிலங்களுக்கிடையே சரி, மாநிலங்களில்
உள்ள தொகுதிகளுக்கிடையெ சரி மக்கள் தொகையின் விகித்தத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க
வேண்டும்.
மேலே உள்ள பட்டத்தில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட
மக்கள் தொகை பெருக்கத்தை காணலாம். ஆனால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை.
1976 ஆம் ஆண்டு 42 வது சட்டதிருத்தத்தின் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம்
மாற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்
நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. பின் 2001யில் 84வது சட்டத்திருத்தம் இதனை
25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது (அதாவது அந்த சட்டம் 2026 வரை தான் செல்லுபடியாகும்.)
சுருங்க கூறினால், 1971 யில் 54 கோடி மக்களுக்கு 545 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இன்று 130 கோடி மக்களுக்கும் அதே 545 பிரதிநிதிகள் என்பது ஏற்ப்புடையதன்று. இப்போதும்
மீண்டும் அதனை நீட்டித்தல் உலகளவில் ஜன நாயக நடுகளில் மக்கள் தொகை, பிரதிநிதித்துவ
விகித்ததில் இந்திய பின் தக்கியே இருக்க நேரிடும். 2026 யில் ஏற்படக்கூடிய பிரதிநிதித்துவ
மாற்றத்தில் பெரிதும் இலாபமடையக்கூடிய மாநிலங்கள் பற்றி கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
இந்த வரைபடத்திலிருந்து உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும், ஆனால் தமிழ் நாடு, கேரள, ஹிமாஜலம் போன்ற மாநிலங்கள் குறைந்த அளவில் கூடுதல் பிரதி நிதித்துவம் ஒதுக்கப்படும். இதற்கு முக்கிய காரணம் 1971-91 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் தொகைக்கட்டுப்பாடே ஆகும். இதனை அரசியல் காரணம் மட்டுமே சொல்வது ஏற்றதன்று, பொருளாதாரமே முக்கிய காரணம், உதிரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலத்தின் பொருளாதாரம் பெறுமளவு விவசாயம் சார்ந்தது, தொழில் துறையோ, சேவைத்துறையோ சார்ந்த மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு ஏற்க்கப்படுள்ளது என்பதை கீழே உள்ள வரைபடத்தில் காணலாம்.
அரசியலமைப்பு குழுவில் பீமாராவ் அம்பேத்கர் வாதிட்டது போல அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நிர்வாக உறுப்புகள் குடிமக்களே. மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்பதே மக்களாட்சியின் கோட்பாடு. 2026 ஆம் ஆண்டு இதை மறுசீரமைப்பது மிக அவசியம் ஆகும்.
இந்த திட்டத்தில் செயல் முறை விதிமீறல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. செப்டம்பர் 2019 ( கோவிட்-19 துவங்குவதற்கு முன்னே) திட்ட வடிவைப்பாளர், ஆலோசகரை தேர்ந்தெடுக்கும் வழிமுறை மத்திய பொதுப்பணித்துறையால் (CPWD) துவங்கப்பட்டது. இரண்டு நிலைகளில் இது நடத்தப்பட்டது, அதற்கான ஏலம் (Bidding) 2019 செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுக கூட்டத்தில் 18 நிறுவனம் பங்கேற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஏலம் செப்.30 அன்று பரிசீலிக்கப்பட்டது, அதில் 6 நிறுவனம் அக்.11 அன்று தங்கள் அனுகுமுறையை காணொலி விளக்கமளிக்க அழைக்கப்பட்டது. இறுதியாக 4 நிறுவனங்கள் தேர்நதெடுக்கப்பட்டு, அவற்றின் நிதி ஏலம் பரிசீலிக்கப்பட்டது. 80 சதவீத மதிப்பீடு தொழில்நுட்ப தரத்திற்கும், 20 சதவீத மதிப்பீடு நிதி ஏலத்திற்கும் வழங்கப்பட்டு M/s HCP Design Planning Pvt Ltd தேர்வு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1589177