அத்ம ஜயம்
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்; முற்றும் உணர்த்த பின்னும்
தன்னை வென்று ஆலும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ?
- மகாகவி பாரதி
வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும், அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே. எல்லா புனித நூல்களிம் - தோரா, பைபில், குறான், உபனிஷதம், வேதம், புரானம், க்ரந்த சாஹிப் எல்லாம் வலியுறுத்துவது இதனைப் பற்றியே. சித்தர்களும், ஞானிகளும், சான்றோர்களும் முதன்மைப்படுத்தி சொல்வது இதைப் பற்றியே
"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"
என்றும்
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறான்"
என்றும்
"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையின் பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த அவனருளாலே"
- திருமூலர் திருமந்திரம்
ஸ்ரீமத் பகவத் கீதையில் பக்தி யோகம் மூன்றாவது அத்தியாயத்தில்
கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு தன்னை வெல்லுதல் பற்றிய இல்லையேல் ஏற்ப்படும் தீங்கினையும் அறிவுரையாக உபதேசிகிறர். அந்த அத்யாதின் கடைசிப் பாடலில்
அது பின் வருமாரு,.
“ஏவம் புத்தெஹ் பரம் புட்த்வா
சம்ஸ்த்ப்ஹ்யாத்மானாம் ஆத்மான
ஜஹி சத்ரும் மாஹா பாஹோ
காம ருபாம் துராசதாம்”
(Meaning : Thus knowing oneself to be superior to the intellect, control the mind with intellect.
In this way, O mighty armed one, destroy the unconquerable enemy in the form of desire)
எல்லா மாதமும் இதயே வலியுருதுகிறது அதனையே செயலும் படுத்துகிறது. அது கோவிலோ, தேவாலயமோ, மசுதியோ இங்கே இறைவனை வழி படும் ஏற்பாடு உள்ளது, அதன் முதல் கட்டமாக மனிதனின் ஐம்புலங்களான மெய்,வாய்,கண்,செவி,மூக்கு இவற்றை கட்டுப்படுத்தும் ஏற்பாடு உள்ளது. இங்கே மனம் ஒரு-நிலையடையும் போது புரியாதக் கேள்விகளுக்கும், நம் சிக்கல்களுக்கும் தீர்வுக்கடைக்கிறது. இது நமக்குல் உள்ள ஆற்றல் நமது ஆனுபாவத்தையும் அறிவையும் கொண்டு உள்ளிருந்து வெளிப்படும் பதில். இதுவே உள்ளொளி எனப்படும்
சற்றே கற்பனைச் செய்து பாருங்கள்,
வெளி நோக்குப் பயணிப்போம் - நாம் வாழும் இந்த பூமியை விட்டு பல்லாயிரம் கோடி மைல்கள் வெளியே செல்கிறோம் - சூ¡¢ய குடும்பம்(Solar System), அதையும் தாண்டினால் பால்வெளி மண்டலம்(Milky Way Galaxy), அதையும் தாண்டினால் பிரபஞ்சம்(Universe), அதையும் தாண்டி சென்றால் நாம் காண்பது வெற்றிடம்.
இப்போது உள் நோக்குப் பயணம்- நம் உடல், அதன் உள்ளே சதை, அதன் உள்ளே ரத்தம், அதன் உள்ளே எலும்பு, இவை பேறணு,அணு, துனை அணு துகள்களால் ஆனது.
அதன் உள்ளே?? தற்போது உள்ள பல விஞ்ஞான உபகரனங்களால் முடியாதை நம் கற்ப்பனையால் நோக்கினால் அங்கும் காண்பாது வெற்றிடமே.
சமிபதில் CERN நிறுவணம் (HIGGS BOSON) எனப்படும் இறைத்துகள் இருப்பதை 99.99% உண்மை என்று கண்டா¢யப் படுள்ளது. இதற்கு வித்திட்டவர் ஒரு இந்தியர் "சத்தியேந்திரநாத் போஸ்". ஆக இந்த பிரபஞ்சத்தயே உருவாக்கப் பட்ட அனுக்கலால்
உருவானவர்கள் நாம்!! அப்படியானால் இந்த பிரபஞ்சதில் உள்ள தன்மையும் ஆற்றலும் நம்முள் இருகிறது அல்லவா?? இதனை உணர்ந்தவன், வெளியே உள்ள தாக்ககளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது.
வேதங்களும், உபனிஷ்த்துகளும் ஏற்றுக் கோண்ட உண்மை இது, "ப்ரிஹதரன்யக உபனிஷத்" இதனைப் பற்றி குறிப்பிடும் வா¢கள்
“This Self is nearer than all else, dearer than son, dearer than
wealth, dearer than anything. one should worship Self as Love. Who
worships Self his love shall never perish. This Self is the Lord of
all beings;”
கிருத்தவர்களின் புனித நூலான "பைபிலில்" “ye are gods” நீங்கள் எல்லோரும் கடவுள்
என்கிறது.
இஸ்லாமிய புனித நூலான "திருக்குறானில்" “We are closer unto him (Human) than his jugular (his own vein)vein” இறைவன் மனிதனிடமே இருகிறான் என்றுணர்த்துகிறது
அதற்கும் மேல் பார்த்தால் "தன்னை அறிதல்" என்பதின் முகிய நோக்கமான
தன்னிலை தவறது ஒழுக்கத்தைக் கடை பிடித்து வாழ்வதே.
இதனையே வள்ளுவன்,
“ஒருவன் பிறப்பலோ அல்லது குலத்தலோ உயர்ந்தவன் இல்லை
அவன் ஒழுக்கமே அவனை உயர்த்துகிறது”.
என்று கூறுகிறார்.
விவேகாநந்தர் கூறிய ஒரு சின்னக் கதையுடன் நிறைவு செய்கிறேன்,
ஒரு பெண் சிங்கத்தைப் பற்றிய கதை உண்டு. அது கருவுற்ற ஒரு சிங்கம். அது ஒருசமயம் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் ஆட்டு மந்தையைப் பார்த்தது. உடனே அதன்மேல் பாய்ந்தது. அந்த முயற்சியில் அது இறந்துவிட்டது. இறப்பதற்கு முன் அது ஒரு குட்டியை ஈன்றது. தாயற்ற அந்தச் சிங்கக்குட்டியை ஆடுகள் வளர்த்தன. அந்தச் சிங்கக்குட்டி ஆடுகளுடனேயே வளர்ந்த்து, புல்லைத் தின்றது, ஆடுகளைப் போலவே கத்தியது. காலப்போக்கில் அந்தச்சிங்கக்குட்டி நன்கு வளர்ந்து ஒரு பொ¢ய சிங்கமாக மாறியது. ஆனால் அது தன்னை ஓர் ஆடு என்றே எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வேறோரு சிங்கம் இரை தேடிக் கொண்டு அங்கு வந்தது. அங்கே ஆடுகளுக்கு நடுவில் ஒரு சிங்கம் இருப்பதையும், அது ஆபத்துச் சமயத்தில் ஆடுகளைப் போல்வே பயந்து ஓடுவதையும் கண்டு வியப்படைந்தது. அது அந்த ஆட்டுச் சிங்கத்தை நெருங்கி, "நீ ஆடல்ல, சிங்கம்" என்று சொல்ல முயன்றது. புதிய சிங்கம் தன்னை நெருங்கும் போதே "ஆட்டுச்சிங்கம்" பயந்து ஓடியது. ஆகவே புதுச்சிங்கம் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது. ஒரு நாள் ஆட்டுச்சிங்கம் தூங்கிக் கொண்டிருப்பதைப் புதிய சிங்கம் பார்த்தது. உடனே அதை நெருங்கி," நீ ஒரு சிங்கம்" என்று கூறியது. அஞ்சி நடுங்கிய அந்த ஆட்டுச் சிங்கம், புதிய சிங்கம் சொவதை நம்பாமல் "நான் ஆடுதான்" என்று சொல்லிக்கொண்டே ஆட்டைப்போல் கத்தியது. புதிய சிங்கம் ஆட்டுச்சிங்கத்தைப் பார்த்து,"தண்ணீ¡¢ல் பார். நம் இருவருடைய உருவங்களின் பிரதிபலிப்பும் தொ¢கிறது" என்று கூறியது. ஆட்டுச்சிங்கம் ஏ¡¢ நீ¡¢ல் தென்பட்ட இரண்டு பிரதிபிம்பங்களையும் ஒத்துப் பார்த்தது. பின்னர் புதுச்சிங்கத்தையும் தன்னுடைய பிம்பத்தையும் பார்த்தது கணமே, தான் ஒரு சிங்கம் என்ற எண்ணம் அதற்கு வந்து விட்டது. உடனே அது கர்ஜித்தது; ஆடுபோல் கத்துவது மறைந்துவிட்டது. நீங்கள் சிங்கங்கள்; தூய்மையான, எல்லையற்ற, முழுமையான ஆன்மாக்கள். பிரபஞ்சத்தின் சக்தி முழுவதும் உங்களுக்குள் இருக்கிறது.