Monday 16 March 2020

அறிவு, கடமை, நம்பிக்கை: Know your MASTER!!

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!!


#Materialistic Superstition

உயிரற்ற பொருட்களிடம் மட்டும் "மூட" நம்பிக்கை வைத்து... தன் கோரிக்கையையும் வைத்து... கடவுள் இருக்கான்... எல்லாம் அவன் பார்த்துகொள்வான் என்று தன் கடமையிலிருந்து தவறுபவன் தான் உண்மையில் "நாத்திகவாதி"

இழி பிறப்பு, (Inglorious Birth) துன்பப்பிறவி...

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு (குறள்: 351)

#EgoCentric Approach

"பகுத்தறிவு" என்றும் "நடுநிலை" என்றும் முகமூடியுடன் எதிர் சிந்தனைகளை, மாற்று கருத்துகளை மட்டம் தட்டுவது, ஏளனம் செய்வது...

உண்மையில் "நடுநிலை", "மதசார்பின்மை" என்பது ஒரு ஏமாற்று சூழ்ச்சி...  மாற்று கருத்துகளை மட்டம் தட்டும் நோக்கில் பயன் படுத்த படுவது....

ஆம்...

கதையை கேளுங்கள்... நீங்கள் சென்னையிலிருந்து மும்பை செல்ல திட்டமிடுவதாக வைத்து கொள்ளுங்கள்... எத்தனை வழிகள் உள்ளது?

விமானம், பேருந்து, இரயில், தனி ஊர்தி, இரு சக்கர வாகனம், ஏன் நடந்து கூட செல்லலாம்... இதில் ஏதாவது ஒரு வழியை தெரிவு செய்வது அறிவுடைமை... இங்கு தெரிவு செய்ய பற்பல காரணங்கள் இருக்கும்... பணம், நேரம், வசதி... பல...

இங்கு " நடுநிலை" என்று எதையும் தேர்வு செய்யாவிட்டால் நாம் சென்னையிலே இருக்க வேண்டியது தான்....

இது எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் பொருந்தும்.

அப்போ, குறைந்தபட்ச நடுநிலை என்பதும் பகுத்தறிவு என்பதும் நாம் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன், எந்த கருத்தையும் ஆதரிக்க அல்லது எதிர்க்கவும் முன், நம் சிந்தனையை ஆழ்ந்து செலுத்துவதில் உள்ளது!!!

கோவில்கள் மூடப்பட்டுள்ளன... மருத்துவமனைகள் திறந்துள்ளன!!

ஆம்... கல்வி நிலையங்கள் மூடப்படிருகின்றது... கல்லூரிகள் மூடப்படிருகின்றது.... ஆராய்ச்சி மையங்கள் மூடப்படிருகின்றது....   அதையும் சேர்த்து கொல்வோம்!!

வேதம், உபனிடதம், குரான், விவிலியம் அல்லது ஏதாவது மத நூல்கள் எவையேனும், ஆலையங்களில் மருத்துவம் பார்த்ததாக, அல்லது அறுவைசிகிட்சை செய்ததாக குறிப்பு உள்ளதா?? #WrongCorrelation

இவைகள் மனிதம் வளர்க்க, ஞானம் வளர்க்க பயன்பட்டவை!!

Be the #MASTER of your MIND!!!

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (குறள்: 268)

#WinningThyself

No comments:

Post a Comment