திரு. ரஜினி காந்த் பேசியது பொய் என்றும், பெரியார் பற்றி அவதூறு பேசுகின்றார் என்றும் எதிர்பலைகள் தமிழகம் எங்கும் ஏராளம்...
ரஜினி இப்படி அவதூறு செய்தி பேசுரிங்களே என்று கேட்டால்...
சாரி "மன்னிப்பு கேட்க முடியாது" என்று கூறுகின்றார்!!
அடடா....
"டம்மி" பீஸ் நினைச்சா, "டேர்" பீஸ் போல இருக்காபடி!!!
"நான் பாத்தத நான் சொல்றேன், அவங்க பாத்தத அவங்க சொல்ராங்க!!"
இதை ஏற்று கொள்ள மறுப்பது பகுத்தறிவா!??
இங்க நம்ம பலபேருக்கு இருக்க பிரச்சனை என்ன தெரியுமா!?
நமக்கு தெரிஞ்சது மட்டும் தான் உண்மை!! #Omniscience
மாற்று கறுத்தோ, அடுத்தவன் நியாயம் எல்லாம்...
"முட்டு கொடுப்பதாக" மட்டுமே பார்க்க பட வேண்டும்!!
#Self-Righteous
தனிமனிதனை தாக்குவதும், கொச்சைபடுத்துவதும் பகுத்தறிவா??
#Stigmatization
நம்பிக்கையை கொச்சை படுத்தி சித்தாந்தம் வளர்பதும் பழமைவாதம் தான்!! கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்!!!
உண்மை எது? நம்பிக்கை எது?
இதை வகை படுத்தலாம்...
எல்லோரும் "நம்பும்" உண்மை,
யாரும் "நம்பாத" உண்மை,
இவ்விரண்டுக்கும் இடையில் தான்
"உனக்கு" தெரிந்த உண்மையும், "எனக்கு" தெரிந்த உண்மையும்!!!
St.அகஸ்டின் சொல்வது போல்,
"நம்மை உயர்த்தும் உண்மையை நாம் விருப்புகின்றோம், அதுவே நம்மை நிந்தித்தால், குற்றஞ்சாட்டினால் அந்த உண்மையை வெறுக்கின்றோம்"
பெரியார் இத சொன்னாறு, அத சொன்னாறு என்று கதை விடுவதற்கு பதில், அவர் பேசியதை, எழுதியதை, ஆராய்ச்சி செய்ததை, பொது தலத்திற்கு கொண்டுவந்து விவாதிப்பதோ, விமர்சிப்பதோ, வாதிடுவதோ... "பகுத்தறிவு" க்கு உத்தமம்!!
#Rationalism
முரசொலி வாசகர்கள் கூறுவதாவது, "1971 ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட **** படம் "ஸ்ரீ இராமர்" படம் இல்லையாம்... "தென்னாடுடைய சிவபெருமான்" படமாம்...
சரி அது ஒருபுறம் இருக்கட்டும்!!
1971 ஊர்வலம் பற்றிய செய்தியை "துக்ளக்" இதழில் மேற்கோள் காட்டாமல் 2017 ல் வந்த "ஔட்லுக்: தி இந்து குரூப்" கட்டுரை என்று சொல்ல காரணம் என்ன??
தான் "துக்ளக" வாசகர் இல்லை என்று காட்டவா??
Outlook is not a part of The Hindu Group.
Why he hooked up The Hindu??
Read more...
Outlook is not a part of The Hindu Group.
Why he hooked up The Hindu??
Read more...
2017 ஔட்லுக் கட்டுரையின் நிலை இப்படி இருக்க....
1971 ல் "தி இந்து" பத்திரிக்கையில் வந்த செய்தியும் வெளிச்சத்திற்கு வந்தது!!
அதில் "மூட" நம்பிக்கை எதிர்ப்பு பேரணி பற்றியும், "ஆபாச" படங்கள் பற்றியும் குறிப்பு உள்ளது தெரிகிறது.
மேலும் இருக்கும் குறிப்பு, அந்த மாநாட்டில் நிறைவேற்ற பட்ட தீர்மானம் குறித்தது...
"மற்றவர் மனைவியை மீது ஆசை கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்க கூடாது" என்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தி வந்த ஒரு வாரத்தில், "தி இந்து" நாளிதழ் தனக்கே உறிய பாணியில் "மன்னிப்பு" கேட்கிறது!!
எதற்கு??
இங்க தான் முக்கியமான் விசயமே வருது... ஆம்... 1971 அந்த தீர்மானத்தை தவறாக திரித்து கூறியதற்கு தான் மன்னிப்பு...
என்ன திரித்தது?
"திருமணமான பெண் வேறொருவரை விரும்பினால் அதை குற்றமாக்க கூடாது" என்பதே தீர்மானம். இதை தான் திரித்து வெளியிட்டு மன்னிப்பும் கேட்டது "தி இந்து"
இது ஒரு புறம் இருக்க, 2017 ல் கட்டுரை எழுதியவர் எதன் அடிப்படையில் இதை குறிப்பிட்டார் என்று கேள்வி எழ...
அவரும் சோ ராமசாமி சொன்னர், துக்ளக் செய்திகளை ஆதாரம் காட்டியதாக கூறுகின்றார்...
வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்து இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!
இந்த பத்திரிகைகள் நேர்மையானவர்கலா??
உண்மையைதான் வெளிப்படுத்துகின்றனர்கலா??
Today's Media is much less than a Messenger... Still they should be Responsible, Reasonable and Rational... Even the Messenger has his/her own code of Conduct and Ethics...
If the falsehood, delusion, Fake message of the media creates chaos in the Society, who should pay the cost??
Is the existing mechanism of Self-Regulation ineffective??
#Regulation_of_Media
தன் தேவைக்கேற்றபோல செய்திகளை திரிக்கின்ற ஊடகங்களுக்கு வேண்டும் கடிவாளம்!!
இனி நீதி மன்றம் சொல்லட்டும்...
நாராயண!! நாராயண!!
Rajini's Speech on Role and Responsibility of Media in Today's Society
Rajini's Speech on Role and Responsibility of Media in Today's Society