Friday, 25 September 2020

எல்லாம் தெரியும் என்ற முட்டாள்தனம்!!

 #Dunning kruger effect

உதாரனமாக கம்பராமயனம், மகாபாரதம் பற்றி துவங்கி டாஸ் கேப்பிடல் வரை விமர்சிப்பவர்கள் பெரும்பாளும் அதன் மூன்றவது பக்கத்தை கூட புரட்டி இருக்க மாட்டார்கள்!!

#OverConfidence Effect

"அதிகம் தெரிந்தவன் தன்னை குறைத்து இடை போடுவதும், அரைகுறை தெரிந்தவன் தன்னை மிகைபடுதிக்கொள்வது என்பது இயல்பு"- இது உளவியல் கோட்பாடுகளில், டன்னிங்-க்ரூகர் விளைவு என்பது ஆகும்.

#Illusionary Superiority

 இது ஒரு அறிவாற்றல் பற்றிய சார்பு (Function), இது ஒரு மாயையான  புரிதல் சார்ந்தது. 

Refer: We are all confident idiots!!

இந்த Machine Learning யுகத்துல, மன்னுல செஞ்ச கம்பியூட்டர் போர்டு கூட வர தகவல் சரியானதா என்று மாற்று தரவுகளை கொண்டு சரி பார்கிறது Artificial Intelligence பயன்படுத்தி!

நான் கேட்குறேன், உனக்கு தான் Natural Intelligence இருக்குல அத கொஞ்ச Calculator ல இருக்க Chip அளவு கூட பயன்படுத்த மாட்டேன் என்றால்....

என்ன வென்பது!?


பெரும்பாளும் ஒரு செய்தியின் அல்லது சமூக வலைதள பதிவின் உண்மை தன்மையை சற்றும் ஆராயாமல் பரப்புபவர்/பகிர்பவர்களை இருவகை படுத்தலாம்.

முதல் வகை, தன் நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் முட்டாள் தனத்தை பயன்படுத்தி பணம் ஈட்ட நினைப்பவன்!

இரண்டாம் வகை அவனே ஒரு முட்டாளாக இருப்பான்!!

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்ப்போம்!!!

#BewareofFakeNews

#BeResponsible

#சுயமரியாதை


Wednesday, 23 September 2020

நம்மை முட்டாளாக்கும் தலைப்பு செய்தி விவாதங்கள்

 

தலைப்பு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்யும் முட்டாள் கூட்டத்திற்கு நடுவில் தான் நாம் இன்று வாழ்கிறோம்.

கடந்த வருடம் செய்திதாள்களில் வந்த ஒரு செய்தி.... 

"ஒன்பதாம் வகுப்பு கேள்வித் தாளில் சர்ச்சை: காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?"

இதை பார்த்து எனக்கு ஏற்பட்ட பகுத்தறிவு கேள்விகள்...

1. அச்சு பிழையா?

2. ஆசிரியரின் தவறா?

3. மொழிப்பெயர்ப்பு பிழையா?

4. வராலாற்றை சிதைக்க, காந்தியை அவமதிக்கும் கூட்டத்தின் வன்மமா?

முதல் அந்த பள்ளிகூட புத்தகத்தில் காந்திய பற்றி என் இருக்கு என்று தெரிந்தால் தான் முடிவுக்கு வரமுடியும். அதில் "தற்கொலை" பற்றி காந்தியின் கருத்து இருந்தால், இது அச்சு பிழையாக தான் இருக்க வேண்டும். இல்லை, அவர் "சத்திய சோதனை"யில் சொல்வது போல தான் சிறுவனாக தற்கொலைக்கு முயன்றதை பற்றி இருப்பின் அது கேள்வியின் பொருட்பிழை, ஆசிரியரின் தவறும் கூட!!

பாகுபாடுடைய அறிவிற்கு எதிர் கேள்விகள் தோன்றாது.

எனக்கு தெரிந்து, இதுவரை எந்த பத்திரிக்கையும் அந்த பள்ளிகூட பாடத்தின் நகலையோ, பிழையையோ பற்றி ஏதும் வெளியிடவில்லை!! (ஒரு செய்தியை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு மட்டுமே)

நீங்க முட்டாளாக இருக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு!! மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பதை கைவிடுங்கள்.

Be a Voice, Not an Echo!!!

மூன்றாவது மொழி: C, C++, Java, Python??


 Machine Learning? Artificial Intelligence? Computer Programming?

 

என்னது இது எல்லாம்?

புரான கதை ஒன்று இருக்கு... ப்ரம்ம வாய்விரத புராணம் (Brahma Vaivarta Purana) இதுல இருந்த நான் கேட்ட கதை நல்ல கற்பனை வளம் (Creativity) மிக்கது என்பதால் எழுதுகிறேன்.

"Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution."

《Quotes of Einstein》

விநாயகர் யானை தலை பெற்ற கதை... 

சனி பகவான் நேருக்கு-நேர் யாரையும் பார்தால் அவர்கள் அழிவர் என்று ஒரு சாபம் இருந்தும், கனேசன் பிறந்ததும் அவனை பார்க்க பார்வதி கட்டாயப்படுத்த, கனேசன் தலை சிதரிப்போனது. பார்வதி மயங்கி வீழ்தார்.

இந்த பிரட்சனையை தீர்க திருமாலிடம் செல்கிறார்கள் ( Major Escalation) அவர் கருடனில் அங்கு வருகிறார். தீர்வுகான யோசனை வந்தது, தன் சுதர்சன சக்கரத்தை ஏவிவிடுகிறார்.

இந்த சுதர்சன சக்கரம் இந்தகால தானியங்கி AI Machine (கற்பனை தான்) போன்றது போல. "முதலில் உன் கண்ணில் படும் உயிரினத்தின் தலையை கொண்டுவா" என்று கட்டளையிடுகிறார். இங்கு தான் ஒரு கோடிங்கில் (Programming) தவறு நடந்துள்ளது. 

If ( Search == First Livingbeing)

{

BringtheHead()

}

என்பதற்கு பதிலாக... Nested Loop பயன்படுத்தி இருக்க வேண்டும், அதாவது...

If ( Search == First Livingbeing)

{

If( First Livingbeing == Human & Human == Male)

{

BringtheHead()

}

Else

ContinueSearch()

}


இந்த தவறால் ஒரு யானை பலியிடபட்டு அதன் தலை வந்தது. "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற காரணத்தால் கனேசனுக்கு யானை தலையே பொருத்தப்பட்டது.


#MachineLearning என்றால் நாம் கற்பதல்ல, இயந்திரங்களுக்கு கற்பித்தல். அது ஒருபோது மனித அறிவிற்கு நிகராக மாற்ற முடியாது.அது மனிதகுலத்தின் ஊன்றுகோள் மட்டுமே.

#MimickingGOD


இன்று அதிமேதாவிகள் மனிதனின் பேச்சு மொழிக்கும், கனித-கனிப்பெறி மொழிக்கும் வேறுபாடு தெரியாத நிலையுள்ளது.


சக-மனிதனின் கலாசாரம், பண்பாடு, இயல்பு, தேவை, பிரட்சனைகள் அனைத்தும் உணர மொழி உதவுகிறது.


இதனை சரி செய்ய, தகுந்த, தர்கரீதியிலான முடிவுகள் எடுக்க மட்டுமே கனிதம், கனினி சார்ந்த மொழிகள் பயன்படுத்த முடியும்.

#BeRational

#Useless #PoliticallyMotivated #Bureacrats