சமூக-வலைதளம், (Social Network) இது ஒரு ஆட்டு கொட்டகை (Virtual Goat Shed)
ஆமாம், பல குழுக்களால், நபர்களால் தம் சுய இலாபத்துக்காக (Self Interest) இது தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பின்னல்களில் இருந்து நம்மை காத்து கொண்டால் தான் சுய முன்னேற்றமோ, சமுதாய முன்னேற்றமோ காண முடியும்.
ஆமாம், பல குழுக்களால், நபர்களால் தம் சுய இலாபத்துக்காக (Self Interest) இது தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பின்னல்களில் இருந்து நம்மை காத்து கொண்டால் தான் சுய முன்னேற்றமோ, சமுதாய முன்னேற்றமோ காண முடியும்.
நாம் பகிர்கின்ற காணொலியோ, செய்தியோ, குறுந்தகவலோ, கருத்துக்கலோ நமக்கு இந்த சமுதாயத்தில் நடக்கும் தவறுகளின் மீது உள்ள கோபத்தையும், நம்ம முயற்சி ஒருவரையாவது தீர்வை நோக்கி நகர்த்தும் என்ற நம்பிக்கையில்தான் என்பது புரிகிறது...
ஆனால் நாம் பல நேரம் செய்கின்ற தவறு....
1. இந்த பயன காணும்... இந்த பொன்னு உயிருக்கு போரடுது... அவன் திரும்பி வந்து பள்ளி கல்வி முடித்து, கல்லூரி போய்ட்டிருப்பான்... அந்த செய்தியை நம்ம “அதிக நபர்க்கு பகிருங்கள்னு” பதிவு போட்டிட்டு இருப்போம் 15-20 வருஷத்துக்கு...
2. யார் என்று தெரியாத யாரோ ஒருத்தர் புகைபடத்த (Photo) போட்டு இவர் தான் தமிழக தலைமை செயலாளர் என்றும், இல்ல இவர் 4 எழுத்து நடிகரின் காதலி என்றும், இவர் நேற்று இறந்து போன இளப்பெண் என்றெல்லாம் பகிர்ந்து கொண்டிருகின்றோம்.
3. சமீப காலங்களில் “மீம்ஸ்” கலாச்சாரம், பெருப்பாலும் திரைபடகாட்சிகளின் படம்பிடித்து அதில் கருத்துக்களை வெளிப்படுத்துவது. அவை சிரிக்க வைக்கவும், சிந்தனை தூண்டும் வகையிலுக்கு இருக்கின்றதெனினும், அவை தவறான செய்திகளை, வன்மத்தை பரப்பும் ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது.
செயல்முறை மேலான்மையில் (Operational Management) செயல்முறை ஆராய்ச்சியில் (Operational Research) தரவு பகுப்பாய்வு (Data Analysis) பிணைப்பு பகுப்பாய்வு (Network Analysis) என்று ஒரு கருத்தாக்கம் அல்லது உத்தி (Technique/ Method) உண்டு.... இதன் மூலம் அமெரிக்கவில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து அறியவருவது....
இரு வேறுபட்ட கருத்தியல், சித்தாந்தம் கொண்ட குழுக்கள் பெரும்பாலும் தங்கள் குழுக்குள்ளே கருத்துகளை பகிர்கின்றனர். இதில் பெரும்பாலம் திரிக்கபட்ட, முழுமையற்ற தகவல்கள் பகிரப்படுகிறது (In essence, They twist and tangle such stories, truncated Information to hold the herd in their shed) இங்கு பெரிதும் மாற்று சித்தாந்தம் உடைய குழுக்களிடம் கருத்து பரிமாற்றம் நடப்பதில்லை!! மேல் மட்டத்தில் ஊடகங்களால் விவாதங்கள் நடந்தப்பட்டாலும், அதில் தம் தரப்பு, சித்தாந்த பார்வை மட்டுமே துண்டிக்கப்பட்டு பகீரப்படுகிறது!!
#VirtualGoatShed
#VirtualGoatShed
நாம் பகிர்கின்ற செய்தி நம்மை பற்றி மற்றவர்கள் அபிப்ராயம் ஏற்படுத்த காரணியாக உள்ளது... இதில் நம் சுயமரியாதை அடங்கும். பல சமயங்களில் நாம் உண்மை தன்மை ஆராயாமல் பகிறும் செய்தி/தகவல் நம்மை நாமே இழிவு படுத்துவதற்கு சமம்....
ஆனால், நாம் சற்றும் ஆய்வு செய்யாமல் ஒரு செய்தியின்/ பதிவின் நம்பகதன்மையை பரிசிலிக்காமல், மதிப்பீடு செய்யாமல் பகிர்ந்து வருகின்றோம்.....
நல்லதை பகிர்வோம்! பொய்க்களை, புரட்டுகளை தவிர்போம்!! உறுதி எடுத்துகொள்வோம்!!!
1. ஆதாரம் அற்ற தகவலை பகிர மாட்டேன்.
2. போலி கணக்கின் பதிவுகளை நிராகரிப்போம்.
3. நம்பக்கதன்மையற்ற, இடம்-காலம்-நேரம் குறிப்பிடாத முக்கியதுவம் வாய்ந்த, உணர்ச்சியை தூண்டும் பதிவுகளை பகிர மாட்டேன்.
எந்த பதிவையும் பகிரும் முன் குறைந்தபட்ச ஆய்வை மேற்கொள்வோம்.
#StopFakeNews
#SaveSelfRespect
#StopFakeNews
#SaveSelfRespect
நக்கீரன், சன், ஜெயா, நியூஸ்7, புதிய தலைமுறை இதில் எந்த ஊடக்கத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.... செய்தியை திரித்து கூறும், பொய்யான தகவலை பரப்பு ஊடக்கத்தை நாம் நிராகரிக்கின்றோமோ இல்லையோ நம் சித்தாந்ததிற்கு எதிராக உள்ள வற்றை நிராகரிக்கின்றோம்....
#DifficultyofBeingRational
Those interested to know more about Network Analysis. Here is the Free Online Education....
#MHRD #Swayam #NetworkAnalysis #ARPIT #Economics
No comments:
Post a Comment