Thursday 7 May 2020

பகுத்தறிவு: 50% தள்ளுபடி!!!



ஆன்மீகம் என்பது எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மாவை காண்பது.

ஆத்திகம் என்பது எல்லா உயிர்களிலும் இறைவனை காண்பது.

மனிதம் என்பது இனம், மதம், மொழி கடந்து எல்லா மனிதனையும் காண்பது.

பகுத்தறிவு என்றால் கெட்ட வார்த்தையாக ஒரு குரூப் பார்கிறது, மற்றொன்று அதுக்கு அர்த்தம் தெரியாமலே கொண்டாடுது!!

காலக் கொடுமை!!!

பகுத்தறிவு என்றால் என்ன?

பிராமன எதிர்ப்பா!?

சமஸ்கிருத எதிர்ப்பா!?

வட மொழி எதிர்ப்பா!?

விதண்டா வாதமா!?

பெரியாரியமா!? இல்லை திராவிடமா!?


நியாங்களை, தர்க வாதங்களை "கண்மூடிதனமாக" மறுப்பதும் விமர்சனங்களை, விதண்டாவாதங்களை "கண்மூடிதனமாக" ஏற்பதும், பகுத்தறிவா??

எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டது, தீர்மானம் ஏற்றப்பட்டது என்று எதையுமே ஆராயாமல் யூகத்தின் அடிப்படையில் மட்டும் கேள்வி கேட்பது, பரிந்துறைகள் கூறுவது, பகுத்தறிவா??

பகுத்தறிவு என்பது உணர்ச்சிவசப்படாமல்  எல்லா கேள்விகளிலும் அறிவை காண்பது.

ஒரு விஷயத்த ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ போதுமான காரண-காரணி இல்லை என்றால் அமைதிகாப்பதும் பகுத்தறிவே!!

No comments:

Post a Comment