அதாவது "மானமுள்ளவன்" நூறு என்ன ஆயிரம் பேர் வந்தாளும் சமாளிக்கலாம்....
அவன "சீ..சீ..." சொன்னலே போதும், எதிர்த்து மாற்று கருத்து சொல்ல அச்சபட்டு போயிருவான்...
அதையும் மீறி எதிர்த்து நின்றால், இன்னும் கொஞ்சம் ஆபாசமாக, கொச்சை படுத்துனா போதும்... வெற்றி வாகை நமக்கு தான்...
Every IT WING's STRATEGY!!
நாளைக்கு "சுய கட்டுபாடோ, ஒழுக்கமோ" இல்லாத உன் தலைவனின் வீடியோ/அந்தரங்கம் அவங்க கிட்ட சிக்கினா போதும்.... Breaking Point.... உன் தலைவன் அவங்க மெட்டுக்கு ராகம் பாடுவான்!!
நீ கண்ண மூடிட்டு உன் தலைவன பின் தொடருவது மிக பெரிய அபத்தம்.
"மானத்தை" பேரம் பேசி எவரையும் அடிபணிய வைக்கலாம்.... IT WING STRATEGY.... இது பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் நிலை.... தொண்டன்?? உனக்கு மானமில்லையா??
நம்ம எல்லோரும் இதே திசையில் பயணிக்க துவங்கிவிட்டனர்! காலக் கொடுமை!! ஒரு அரசியல் கொள்கையும் இல்ல, ஒரு பொருளாதார கொள்கையும் இல்லை.... தனி மனித தாக்குதல், கொச்சை படுத்துதல், வெறுப்பரசியல்.... வேறு ஒன்றும் தெரியாது!
நம்ம நம்புவது மட்டும்தான் உண்மை, அதை பேசுபவன் மட்டுமே அறிவாளி!!
இன்றைக்கு நீங்க சொல்கிற.. ஏதோ உ.பி., சங்கி, அடிமை, இரண்டு ரூபாய், 200 ரூபாய் எல்லாம்.... எல்லாம் கடந்து நிற்கிறான்.... அதான் நீங்க சொல்வது போல "முட்டு கொடுக்குறான்" ஆம், தன் பக்கம், தன் தலைவன் பக்கம் தவறு இருந்தாலும், அதை நியாய படுத்த விடா முயற்சி செய்யும் (i.e. மானம் கெட்ட) மனநிலை!! சித்தாந்த தவறுகளை விட்டு கொடுக்காமலிருபது கூட பரவாயில்லை, தலைவர்கள் யார்? அவரும் மனிதர்கள் தானே, தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா என்ன??
ஆனால் இவன் "அறிவு" வசத்தில் வாதிடுகிறானா இல்லை "உணர்ச்சி" வசத்தில் வாதிடுகிறானா!? என்பது தான் கேள்வி....
"அறிவின்" வசபட்டவனுக்கும், "உணர்சியின்" வசபட்டவனுக்கும் உள்ள வேற்றுமையை இந்த காட்சியில் நன்றாக அமைத்துள்ளனர்!!
உணர்ச்சியின் வசத்தில் உள்ளவனை சுலபமாக கைகூலியாக பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது.
Armchair Revolutionary என்ற சொல்லாடல் 20 ஆம் நூற்றாண்டுகளில் புழக்கத்திலிருந்தது. இவர்கள் தன் கறுத்துகள் மற்றும் எழுத்துகளின் மூலம் கிளர்சிகளை, புரட்சிகளை உண்டாகினர். அது நிறையவே அறிவு சார்ந்ததாக இருந்தது.
இப்போது 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் Mouse Click Revolutionary என்று கூறலாம், இவர்கள் IT WING வழியாக அர்த்தமற்ற அரைகுறை கறுத்துகளால் மக்களை குழப்பி ஆட்சி மாற்றம் கொண்டு வருகின்றனர். அதை சுமக்க பெரிய "சுய அறிவற்ற" கழுதை கூட்டமே இருக்கிறதே!!
பொதுவாக இரண்டு பெரிய கட்சிகள் தாம் மாற்றி மாற்றி ஆட்சி பொருப்பில், அரசியல்-பொருளாதர கொள்கையில் பெரிய மாற்றமின்றி ஆளப்போகிறது.
இதை ஆதரித்து நிற்கும் இருவேறு முட்டாள் கூட்டம் தான் மாற்றி மாற்றி "ஜனநாயகத்தை" தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது.
எனக்கு இந்த பொய் கலந்த உண்மையும் சரி, உண்மை கலந்த பொய்யும் சரி.... எல்லாம் ஒன்று தான்...
மரிதாஸ் இருக்கட்டும் ஜெயரஞ்சன் இருக்கட்டும் யார் அடித்து விட்டாலும் பொய் பொய் தான்... மதுவந்தி பேசினாலும் தமிழன் பிரசன்ன பேசினாலும் அநாகரீகம் அநாகரீகம் தான்... மாற்று அரசியல் சீமான் பேசினாலும் கமல் பேசினாலும் அதன் அடிபடையில் விமர்சனம் மட்டும் தான் இருக்கு....
இதை நீ உணரும் போது உன் அறிவு மற்றவரை உ.பி. யாக, சங்கியாக, அடிமையாக பார்காமல்... மனிதனாக பார்க கற்றுதரும்!!
கறுத்துக்களை எதிர் கறுத்து கொண்டு விமர்சிக்க கற்றுகொள்ளுங்கள்!!
விதை ஒன்று போட்டல் சுரை ஒன்றா காய்கும்!!!
ஏதோ ரூ.2, ரூ.200 சொல்கிறார்கள்... இந்த ஆண்டவர்-அடிமை சந்தை நிலவரம் பற்றி First Hand Experience எனக்கு இல்லை.... விலை பேசி கூலி வாக்குபவர்கு மட்டுமே உண்மை நிலை தெரியும்....
பெரும்பாலும் IT WING யின் நோக்கம் Echo Chamber களை உறுவாக்கவது மட்டுமே!!
இவங்க பதிவிடும் 2 Minute மீம்ஸ்கள், 10 Minute வீடியோ... வேகமாக பரப்ப... கூலி அவசியம் இல்லை நம் முட்டாள் தனமும், உணர்ச்சி பெருக்கும் தான் இவர்களின் முதலீடு!!
எல்லாம் அறிவு பூர்மா தோனுது ஆனால் குழப்பமாகவும் இருக்கு....அதில் படைப்பாற்றல் இருக்கும் ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் தான் அதிலிருக்கும் முடாள்தனம் விளங்கம்....
அதேதான் அப்போ, மீம்ஸ் போடுகிறவன் ஐஞ்சுகோ, பத்துகோ பிழைத்து கொள்கிறான். அதை உணர்ச்சி வயத்தில் Share செய்து சுமக்கும் "கழுதைகள்" தாம் அரை வாங்குது!! இவனா எதையும் படித்தும் பார்க்க மாட்டான், தேடியும் பார்க்க மாட்டான்....
IT WING யுத்தி மக்களை சுயமாக சிந்திக விடாமல்... உ.பி., சங்கி, தம்பிகள், ஆண்டவர் அடிமை, என்று இனம்கண்டு Echo Chamber உறுவாக்குகிறார்கள். அங்கு ஒரே "பொய்யை" மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாக சொன்னால் ஒரு அறிவீன கூட்டத்தை நம்ப வைக்க முடியும் என்ற யுத்தி கையாளப்படுகிறது!!
இந்த Echo Chamber களை தகர்த்தாலொழிய சுய அறிவோ, முன்னேற்றமோ சாத்திமில்லை....
சாமானியன் மொழியில் பேசினால்தான் கொஞ்சமாச்சு "பகுத்தறிவு" வளர்க்க முடியும் என்பது வரலாறு....
மறுக்கவில்லை...
ஆனால், அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்டாமல், அவர்களை ஒருமையில் பேசுவது, பெயர் வைப்பது, கொச்சை படுத்துவது... எது போன்ற மனநிலை!!?
இலக்கு ஒன்றாக இருப்பினும், சரியான காரண-காரணிகளோ, நியாயமோ, தீர்வோ இல்லாத ஒருவரை ஆதரிப்பது "முட்டாள்" தனமே!!
No comments:
Post a Comment