Saturday, 9 May 2020

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில் (1)

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில்!!
பாகம்: 1


”நாம் நாகரீக சமுதாயத்தில் வாழ்கிறோம்... ”


இதன் அர்த்தம் என்ன?
#CivilizedSociety

எந்த சமுதாயம், கட்டுப்பாடும், சுய ஒழுக்கம் கொண்டு, விதிகள், சட்டங்கள் கொண்டு திட்டமிட்ட ஒரு பாதையில் செல்கிறதோ அதுவே "நாகரீகமான" சமூகம்... மற்றவை "காட்டுமிராண்டி" விலங்குகள் போல வாழும் சமூகம்... #Unsustainable #Survival-of-the-Fittest

இத்தகைய கட்டுப்பாடு ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு காரணிகளால் கட்டமைக்கப்பட்டதை நாம் அறிவோம்...

1. மத கோட்பாடு, மத நம்பிக்கை: அக்னி, பிர்த்யு, வாயு தொடங்கி  சொர்கம்- நரகம், கர்மா, சரியத், பிலேஸ்பேமி, என்று உலகில் உள்ள எல்ல மத கருத்துகளின் அடிப்படையுமே மனிதனை நல் வழிப்படுத்துதலே!! (Religion and God-fear)

2. அரச கட்டளை: பாகுபலி படத்தில் இராஜ மாதவின் கட்டளையே சாசனம் என்ற கோட்பாடு போலதான் (King's Army or Police-State)

3. சட்டத்தின் ஆட்சி (Rule of Law and Constitutionalism)

4. சந்தை பொருளாதாரம் (Market Economy and Public Choice)


ஆமாம், இன்று சந்தைக்கு ஏற்றவாறு சட்டங்கள் திருத்தப்பட்டும், திட்டங்கள் வகுக்கப்படும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்...


சந்தை என்றவுடன் பெரும் முதலைகள், முதலாலித்துவம் என்று என்னிட வேண்டாம்.


“சந்தை” என்பது (Demand) தேவை (மக்கள்/ வாடிக்கையாளர்) அதற்கு ஏற்ற உற்பத்தி (Production) மற்றும் அளிப்பு (Supply), மக்களின் வாங்கும் சக்திக்கு (Purchasing Power) ஏற்ற விலை நிர்னயம் (Equilibrium Price), அதில் ஏற்படும் இலாபத்திற்கு (Profit) ஏற்ப முதலீடு (Investment), மறுபடி கட்டம் ஒன்று “தேவைக்கேற்ப உற்பத்தி”


இந்த சுழற்சியை நாம் அறிந்த செயல்படுவது அவசியம், இல்லையென்றால் மற்றவர்களின் கணகீட்டுகுள்ளே சிக்கிகொள்ள நேரிடும்!! சந்தை எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் (Public Choice), விளம்பரப்படமோ, விநியோகதார்களும் அல்ல!!


இதை செயல்படுத்த ஒவ்வொறு நாட்டின் சமுதாய, பாரம்பரிய, பழக்க வழக்கத்திற்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது “அரசியல் அமைப்பு சட்டம்” Law of the Land (Constitution of India). இந்த தொடர் அப்படிபட்ட கருத்துகளை “அரசியல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் உங்களிடம் கொண்டு சேர்க்க முற்படுகிறது....



”அரசியல் பொருளாதாரம்" என்பது மார்க்சிய பொருளாதாரமாக (Marxian Economy) சில இடங்களில் கருதப்படும் அல்லது பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துறைக்கும் ஆலோசனையை (Policy Recommendation) குறிப்பிடப்படும். ஆனால், இந்த தொடரில் “அரசியல் பொருளாதாரம்” (Political Economy) என்பது ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அந்நாட்டின் சட்டம், நடைமுறை, அரசுமுறை அவற்றுடன் எப்படி இயங்குகிறது என்று அறிய முற்படுவதாகும்.

இந்த தொடரில் நாம் பல செய்திகளை தொட்டு பயனிக்க போகின்றொம்.....

1. இந்திய நாகரீகம்.

2. இந்திய அரசியலமைப்பு.

3. இந்திய பொருளாதாரம்.

4. இந்திய தத்துவங்கள்.


விவேகானந்தர் "இந்தியாவின் எதிர்காலம்" என்று மெட்ராஸ் மாகாணத்தில் நடத்திய உரையில்... மனு-ஸ்மிரூதி போன்ற பழமையான நீதி தொகுப்பு காட்டுமிராண்டி தனமும் கொண்டிருப்பது இயல்பு... அதை அப்படியே பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படுகிறது என்றும் அதுவே அவசியம் என்றும் கூறுகின்றார்.

இந்திய அரசியல் அமைப்பு 26.11.1949 அன்று நிறைவேற்றப்படுகிறது.

அதற்கு முன் தினம் அண்ணல் அம்பேத்கர் கூறுகின்றார், "இன்று முதல் காந்திய வழியான அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எல்லாம் மறந்துவிடுங்கள்... எல்லாவற்றிக்கும் தீர்வு இந்த சாசனத்தில் உள்ளது.

"சட்டப்படியான பிரட்சினைகளுக்கு சட்டபடியே தீர்வு காண வேண்டும்"

இதையேதான் மனு-ஸ்ம்ரிதி, அர்தசாஸ்த்ர, கமண்டக-நீதி எல்லாம் "மத்சய நியாயம்" என்று கூறுகிறது.

ராஜியம் (ராஜாக்கம்) என்பது அரசு-ஆட்சி...  அதற்கு எதிர் சொல் "அராஜகம்" அரசு கட்டுபாடற்ற நிலை (Anarchy)... இந்த நிலையில் கை ஓங்கியவன் மற்றவறை அதிகம் சுரன்டுவான், வஞ்சிபான் என்பதே "மத்சய நியாயம்" Law of Fish/Jungle - Big Fish eats Small Fishes!!!


யதி ன ப்ரனயத் ராஜா தன்ட் தண்டேய்ஸ்வதந்திதா

(தண்டிக்க படவேண்டியவன் சலிப்பின்றி அரசனால் தண்டிக்க படவில்லை என்றால்)


சூலே மத்ஸ்யானிவபக்ஷ்யன் துர்பாலன் பலவத்ரா

(வலிமையானவன் எளியவர்களை விழுங்கிவிடுவான்)

(மனு-ஸ்ம்ர்தி 7.20)

அதனால் தான் இந்திய அரசியலமைப்பை இன்று பலர் "நவீன-வேதம்" என்கின்றனர்!! Modern Manu Ambedkar


தொடரும்......

No comments:

Post a Comment