Wednesday, 23 September 2020

மூன்றாவது மொழி: C, C++, Java, Python??


 Machine Learning? Artificial Intelligence? Computer Programming?

 

என்னது இது எல்லாம்?

புரான கதை ஒன்று இருக்கு... ப்ரம்ம வாய்விரத புராணம் (Brahma Vaivarta Purana) இதுல இருந்த நான் கேட்ட கதை நல்ல கற்பனை வளம் (Creativity) மிக்கது என்பதால் எழுதுகிறேன்.

"Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution."

《Quotes of Einstein》

விநாயகர் யானை தலை பெற்ற கதை... 

சனி பகவான் நேருக்கு-நேர் யாரையும் பார்தால் அவர்கள் அழிவர் என்று ஒரு சாபம் இருந்தும், கனேசன் பிறந்ததும் அவனை பார்க்க பார்வதி கட்டாயப்படுத்த, கனேசன் தலை சிதரிப்போனது. பார்வதி மயங்கி வீழ்தார்.

இந்த பிரட்சனையை தீர்க திருமாலிடம் செல்கிறார்கள் ( Major Escalation) அவர் கருடனில் அங்கு வருகிறார். தீர்வுகான யோசனை வந்தது, தன் சுதர்சன சக்கரத்தை ஏவிவிடுகிறார்.

இந்த சுதர்சன சக்கரம் இந்தகால தானியங்கி AI Machine (கற்பனை தான்) போன்றது போல. "முதலில் உன் கண்ணில் படும் உயிரினத்தின் தலையை கொண்டுவா" என்று கட்டளையிடுகிறார். இங்கு தான் ஒரு கோடிங்கில் (Programming) தவறு நடந்துள்ளது. 

If ( Search == First Livingbeing)

{

BringtheHead()

}

என்பதற்கு பதிலாக... Nested Loop பயன்படுத்தி இருக்க வேண்டும், அதாவது...

If ( Search == First Livingbeing)

{

If( First Livingbeing == Human & Human == Male)

{

BringtheHead()

}

Else

ContinueSearch()

}


இந்த தவறால் ஒரு யானை பலியிடபட்டு அதன் தலை வந்தது. "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற காரணத்தால் கனேசனுக்கு யானை தலையே பொருத்தப்பட்டது.


#MachineLearning என்றால் நாம் கற்பதல்ல, இயந்திரங்களுக்கு கற்பித்தல். அது ஒருபோது மனித அறிவிற்கு நிகராக மாற்ற முடியாது.அது மனிதகுலத்தின் ஊன்றுகோள் மட்டுமே.

#MimickingGOD


இன்று அதிமேதாவிகள் மனிதனின் பேச்சு மொழிக்கும், கனித-கனிப்பெறி மொழிக்கும் வேறுபாடு தெரியாத நிலையுள்ளது.


சக-மனிதனின் கலாசாரம், பண்பாடு, இயல்பு, தேவை, பிரட்சனைகள் அனைத்தும் உணர மொழி உதவுகிறது.


இதனை சரி செய்ய, தகுந்த, தர்கரீதியிலான முடிவுகள் எடுக்க மட்டுமே கனிதம், கனினி சார்ந்த மொழிகள் பயன்படுத்த முடியும்.

#BeRational

#Useless #PoliticallyMotivated #Bureacrats

No comments:

Post a Comment