Sunday 19 April 2020

நம் இளைய பாரதம் "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்களால்" வழிநடத்தப்படுகிறதா?

இன்றைய தலைமுறை எப்படி வளர்ந்து வருகிறது என்பதை பார்த்தால்....

நம் பொருப்பும், கடமையும் கேள்விக்குள்ளாகின்றது....


#ScientificInquiry #Rationalism
என்றெல்லாம் பதிவிட்டாலும்.... தேடல் நம்மிடம் மிகவும் குறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியவில்லை... எந்த செய்தியையும் அறிவு கொண்டு சற்றும் சிந்திகாத ஒரு போக்கு நிலவுகின்றது.... #ReadingBetweenLines

சுய அறிவு என்பது... ஒரு விஷயத்தை ஆதரிக்கவோ-எதிர்க்கவோ போதுமான காரண-காரணிகளை ஆராய பொருமையும், புத்திக்கூர்மையும் வேண்டும்.

ஆனால் நாம்... எதுவாக இருந்தாலும்... இது சரியா-தப்பா... யாராச்சு பத்து நிமட வீடிவிலோ, 2 நிமிட மீம்ஸிலோ சொல்வதை நம்பி பின் செல்லும் அறிவாக உள்ளோம்....

கட்சியில் பதவி-பொருப்பு பெற போராடி கட்டுகதைகளை, வன்மத்தை, வெறுப்பை பரப்பி பிரபலம் அடைய என்னும் இந்த "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்கள்"
பின்னே செல்கின்றோம்....

இப்படி சுயநலம் பிடித்து மக்களின் சுய அறிவை குறைக்கும் இந்த கனவான்கள் தான் நம் நாளைய தலைவர்கள்...

அப்புறம் ஜனநாயகத்த குறை சொல்லாதிங்க!!!
#ThreattoDemocracy

விலகி இருப்போம், விழிப்போடு இருப்பாம்.

மாற்று சிந்தனை தவறில்லை, விமர்சனம்-குறைகூறுவது தவறில்லை.... ஆனால் "சுய அறிவை" சற்றும் பயன் படுத்தாமல் "கற்பனை, கட்டுகதைகள்" பின்னே செல்வது தான் ஆபத்து!!!


இலக்கிய விமர்சனம் செய்ய தன் "தகுதியை" வளர்த்துகொள்பவன் "நல்ல படைப்பாளி" ஆகிறான்... என்று திரு.ஜெய மோகன் அவர்கள் கூறும் கருத்து அரசியல்-பொருளதார  விமர்சனம் செய்பவர்களுக்கும்
பொருந்தும்.

முழு காணொளி இணைப்பில்.....
https://youtu.be/xwd2_JgiYzo

"மாற்று" அரசியல், "மாற்று" சித்தாந்தம், "நடுநநிலை"அரசியல் என்று களமிறங்கியவர்கள் எல்லாம் ஏற்கனவே இருக்கும் "சித்தாந்ததிற்கு" பங்கம் வந்துவிட கூடாது என்பதற்குதான் செயல்படுகிறார்கள் என்று தோன்றவில்லையா?

தனி நபர் விமர்சனம், கொச்சை படுத்துதல், ஆபாச விமர்சனம், தனிமனித தாக்குதல் என்று  எதிர் கருத்துகளை தகர்கும் உத்தியில் எந்த மாற்றமும் இல்லாத பழமைவாதியாகவே உள்ளார்கள் பெரும்பாலும்!! #Branding

பல காலமாக,  நம் செய்தி ஊடகங்கள் தினமும் இரவு "வட்ட மேசை விவாதம்" நடத்துவதே....

மக்கள் சுயமாக சிந்தித்துவிட கூடாது என்ற நற்றெண்ணத்தில் தான்!!

செய்திகளை, நிகழ்வுகளை சுயமாக ஒப்பிட்டாலே நமக்கு பிரட்சினையின் வேறும், கொள்கை முடிவுகளின் நியாயமும் புரிந்துவிடும்!!! #ReadingBetweenLines

Most of the #Biased Media today are just IMPOSING opinions rather EXPOSING the events....

It is easiest to OFFEND but very hard to DEFEND!!


No comments:

Post a Comment