Thursday 23 April 2020

சுயமரியாதை சூரையாடும் ஃபார்வர்டு கலாசாரம்!!!



அதேதான், இங்கு பெருங்கூட்டம் தான் பார்க்கும் எல்லாவற்றையும் ஃபார்வேர்டு செய்துவிட்டு, ஸேர் செய்துவிட்டு தன்னை ஒரு அறிவாளியாக என்னி சிலிர்கிறது 🤦‍♂️

இதுனால கட்சியில் "வட்ட செயலாளர்" பதவியும் கிடைக்காது, "சதுர செயலாளர்" பதவியும் கிடைக்காது.... உங்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி சங்கி-மங்கி, ரூ.2 இல்ல ரூ.200 பட்டம்👨‍🎓👩‍🎓 கொடுத்து பெருமை பட வேண்டியதான்....

அதுவும் அந்த பதிவுகளை உருவாக்கிவருக்கே சமர்பனம்👨‍💻👩‍💻....

நாம் ஸேர் செய்யும் பதிவுகளை எதிர்தரப்பினர் கேள்வி கேட்கும் நிலையில்🤷‍♂️ நமக்கு இரண்டே வழிதான்...

1. எய்தவனை கேட்டுகொள் நான் வெறும் அம்பு தான்🤸‍♂️ என்று விளகுவது... அதாவது "பொதி சுமக்கும் கழுதை" போல!!!

2. "எல்லாம் எனக்கு தெரியும்" என்று நமக்கு நாமே அறிவாளி என்று என்னிகொண்டு செல்வது🚶‍♂️

குறைந்தபட்ச தேடலுமில்லை, சுயமாக சிந்திக்கும் அறிவும் இல்லை....

இப்படி நிலையற்ற அரசியல் சித்தாந்ததிற்காக, தலைவருக்காக நம் சுய மரியாதை இழந்து, தன்மானத்தை அடமானம் வைத்து, மதிபற்றவராக வீழ வேண்டாம்.....

எந்த செய்தியும் பகிரும்முன் C.R.A.P. Test செய்யுங்கள்!!

C.R.A.P. Test?



முதலில் 'C' Current - சமீபத்திய நிகழ்வா என்று பார்க வேண்டும்.

இரண்டு 'R' Reputable -  மதிப்பு, நம்பக தன்மையை உறுதி செய்ய வேண்டும்

மூன்று 'A' Authenticity, Author - எழுதுபவரின் சார்பு, சுயலாபதிற்காக, பதவி ஆசைக்காக கட்டுகதைகளை உருவாக்கும் "மேதைகள், அறிஞர்கள்" இங்கு உண்டு!!

இறுதியாக 'P' Purpose - அந்த கட்டுரையோ, பதிவோ, மீம்ஸ்கலோ... அதன் நோக்கம் பற்றிய தெளிவு வேண்டும்.


ஒரு எடுத்துகாட்டு இங்கே!!

இதோ... "Voice of South India" எனறு ஒரு சமூக வளைதல பக்கம்... சாலையோர காய்கனி வியாபாரிகள் தாக்கப்படும் காட்சி, இது குஜராத்தில் நடந்தது. அதற்கு அந்த காவல்துறை சார் ஆய்வாளர் பணியிடை நீக்கம செய்ய பட்டுவிட்டார்....

இது நடந்த நிகழ்வுதான், இதனை இந்த "Voice of South India" பக்கம் வெளியிடும் துவனியை பாருங்கள்....

"ரிலையன்ஸ் ஃப்ரஸில் மட்டும் தான் வாங்க வேண்டுமா?" என்று முடிக்கிறது... இங்குதான் "நோக்கத்தை" ஆராய வேண்டும். விளக்கம் வீடியோவில்....


எ.கா. 2
நல்ல முயற்சிகளுக்கு பாராட்டு.. #TheQuint



இதுதான் உண்மையில் #Verified or #FactCheck..... 
கற்றுக்கொள்வோம், தெளிவடைவோம்...

இங்கு நிறைய ஆ(டு)ட்கள், பொய் தகவல்களை உடைப்பதாக கூறிக்கொண்டு தன் அரசியல் சித்தாந்த பற்றுக்காக, ஆண்டவர்-அடிமை உறவுக்காக புதியதாக ஒரு பொய்யை பரப்புகின்றனர்...

உண்மையை அறிய "தேடல்" தான் மிக அவசியம் ஆனால் நம்ம ஆட்கள் பெரும்பாலும் "கற்பனையை" மட்டுமே பயன்படுத்துவர்!!!

Beware of #Propaganda
Be #Rational
#EducateYourself

எ.கா.3

Am completely against any kind of "Name Calling" or "Branding"

சுயமாக சிந்திகக்கூடிய எவரும் இந்த இழிவான காரியத்தை செய்ய மாட்டார்கள்... கருத்து சுதந்திரம் என்பது "கருத்துகளை மறுக்க/எதிர்க" மட்டுமே... தனிமனித தாக்குதல், கொச்சை படுத்துதல் என்று பயனிக்கும் "அறிவுக்கு" அது கண்டிபாக புரிய வாய்பில்லை!!

Here i mentioning few names, just for an understanding.... Apologizes....

அரபு நாடுகள் பற்றியும், மற்ற நாட்டின் கலாசார, பண்பாடுகளை காயபடுத்துவதாக, இனவாதம், மதவாதம் பேசும் வலதுசாரி அரைவேக்காடுகளே "சங்கிகளே" "பக்தாக்களே"....
#BeRational

இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சற்றும் கவலையின்றி... தன் அரசியல் சித்தாந்த அடிபடைவாதத்தில் சிலிர்த்து கொண்டாடும் இடது சாரி அரைவேக்காடுகளே "உண்டியலே", "உ.பி. தோழர்களே", "அர்பன் நக்சல்களே"...
#StopPoliticization

நாட்டோட இறையான்மை பாதிகின்றது பற்றிய அக்கரை இல்லை... உள்ளூர் அரசியலே தகுடுதித்தோம் நமக்கு, இதுல மானத்த வாங்குறானுங்க.... 
#AntiIndian


உங்களுக்கெல்லாம் "கைதட்டுங்க, விளகேத்துங்க" சொல்லி டாஸ்க் கொடுத்து பிஸியா வைக்கனும்... 

நம்ம அறிவுக்கு அவ்வளவு தான் தகுதி.... ஒருத்தனும் திருந்தமாட்டானுக!

படித்து மற்றவனுக்கு அறிவூட்ட வேண்டியவர்களே இன்று பொறுப்பற்ற சித்தாந்த அடிபடைவாதிகளாக இருப்பது காலத்தின் கொடுமை!!

என்னை பொருத்தவரை சுயமாக சிந்திக்க தெரியாத நீங்க எல்லோரும் ஓரினமே!!!
#Fundamentalist

அறிவை வளர்த்துகொள்வோம்... நமக்கு என்ன தெரியுமோ அதை செய்வோம்.... #SocialTrending என்ற போதையில் தொற்றை பரப்பாதீர்கள்.... 

Please, Keep Distance and Avoid Contagion!!!
#BeResponsible 
#StaySafe 

என்னோட அஜன்டா... நான் எப்போதும் சொல்வதுதான்....


No comments:

Post a Comment