Wednesday, 5 February 2020

ஆன்மீகம்!!! பாமர-சாமானியனுக்கு என்ன??

எல்லாம் அவன் செயல்!
அவனின்றி ஒரு அணுவும் அசையாது!!

ஆன்மீகம்!!! (Spirituality)

ஆன்மீகம் நிலையானது, ஆனால் முறைகளும், கரு பொருளும் கலத்திற்கு ஏற்ப மாறுபடும்... இயற்கையை வழிப்பட்ட மனிதன், உருவத்தை, அருவத்தை வழிபட துவங்குகின்றான், வேதம், வைதீகம் என்று செல்கிறான்.. மாற்றம் தவிர்க்க முடியாதது!!

பின் சித்தர்கள், குருமார்கள், என்று பரிணாம மாற்றம் நீண்டபோதும்... நோக்கம் ஒன்று தான்... மனிதனை "ஒழுங்கு படுத்துதல்", வழி  நடத்துதல்... இறுதியாக  "மனிதம்" காத்தால், எல்லா உயிர்களை நேசித்தல்...

மக்கள் தொண்டே "மகேசன்" தொண்டு!!

வேதம், வேதாந்தம், உபனிடதம், பௌதம், சமனம், ஆறு தத்துவ ஞான பள்ளிகள், சைவ - வைணவ சித்தாந்தங்கள், பக்தி மார்கம், சமூக சீர்திருத்தங்கள்... அதுவும் பட்டியல் நீளும்....

ஜீவ காருண்யம் (Well being of all livingthings) தான் ஆன்மீகத்தின் மேன்மை... பண உள்ளவர்க்கு மட்டும் யாகம், தீட்சை, ஆகமம் என்று அருள்வதில்லை ஆன்மீகம்!!

உங்க பூஜை-புனஸ்காரம், ஆகமம், வேள்வி, பாரம்பரியம்... யார் வாழ்கையை மேம்படுத்த போகிறது!!

இன்று கண்முன் தோன்றும் உண்மைக்காக வாழாமல், என்றோ நடந்தது என்றும், நடந்திருக்கும் என்றும் முழுமையற்ற தகவல்களை வைத்து போராடுவது, வன்மத்தை பரப்புவது எல்லாம் "பிரிவினை" யுத்தி!!

ஒரு ஆறு (River) தன் உற்பத்தி இடத்திற்கு திரும்ப முடியுமா?? அது மலைகளை, பள்ளத்தாக்குகளை, காடுகளை கடந்து, பல மைல்கள் ஓடி வருகிறது... ஒரு வேலை அது திரும்ப நினைத்தால், எல்லா திசையிலும் சிதறி, ஒன்றுமில்லாமல் வற்றிவிடும்... இது தான் உண்மை!!!

இந்த உத்தியை (Strategy) தான் இன்று எல்லா பிரிவினைவாதிகளும், சித்தாந்தங்களும் கலகம் செய்து கொண்டிருக்கிறது!!

மாற்றம் என்பது நிதர்சனம் என்பதை ஏற்று கொண்டு, பாமர-சாமாணிய மக்களுக்கு தேவையான சமூக-பொருளாதார (Socio-Economic) மேம்பாட்டிற்கு உழைப்பதே உத்தம்!!


அதற்கு தான் தேசியவாதத்தின் தந்தை
(Prophet of Indian Nationalism) சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார்:

உன் எல்லாக் கடவுளையும் எடுத்து தூரம் வை... இந்தியாவை ஒரு "பெண்" தெய்வமாக பாவித்துக்கொள், அதனை இன்று முதல் வழிபடு... இது அடுத்த சில ஆண்டுகளுக்கு மிக அவசியம்."

இது இன்றும் பொருந்தும்!!! (Vision for the Nation-Building)

இதன் அர்த்தம், பால் அபிஷேக, புஷ்ப்ப மஞ்சறை, பாமாலை ஓதுவது, வழிபடுவதில்லை... மாற்றாக, நாட்டிற்கு சேவை செய்வதை குறிக்கிறது!! இடவாகுபெயர்... நாட்டு மக்களுக்கு, பாமர-சாமானினுக்கு சேவை செய்....

1. இல்லாதவனுக்கு உணவளித்திடு.

2. அவனுக்கு அறிவை புகுத்து.

3. தொழிற்களை, வேலைவாய்ப்புகளை உருவாக்கு

4. புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வித்திடு.

5. ஒதுக்கபட்டவர், ஒடுக்கபட்டவர், கைவிடபட்டர்களை உயர்த்து.

"உலக அமைதி, சமத்தும்" என்றெல்லாம் நூல்களில் சிந்தாத்தம் பேசிவிட்டு, நடைமுறை வாழ்க்கையில் "வேற்றுமை, பிரிவினை, வன்மத்தை" பாராட்டுவது... நம் சாபக்கேடு!!!

ஒளவை பாட்டி சொல்வது போல.."கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!!" இதனை மறந்து/மறுத்து.. "எல்லாம் எனக்கு தெரியும்" என்று "ஆன்மிகம்" என்பதை அரசியலாக-வியாபாரமாக மாற்றிய நம் சந்ததிக்கு இது புரியாது!!

No comments:

Post a Comment