Sunday, 23 February 2020

அராஜகத்தின் இலக்கணம்!!

அராஜகத்தின் இலக்கணம்!!


விவேகானந்தர் "இந்தியாவின் எதிர்காலம்" என்று மெட்ராஸ் மாகாணத்தில் நடத்திய உரையில்... மனு-ஸ்மிரூதி போன்ற பழமையான நீதி தொகுப்பு காட்டுமிராண்டி தனமும் கொண்டிருப்பது இயல்பு... அதை அப்படியே பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம் என்கிறார்.

இந்திய அரசியல் அமைப்பு 26.11.1949 அன்று நிறைவேற்றப்படுகிறது.

அதற்கு முன் தினம் அண்ணல் அம்பேத்கர் கூறுகின்றார், "இன்று முதல் காந்திய வழியான அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எல்லாம் மறந்துவிடுங்கள்... எல்லாவற்றிக்கும் தீர்வு இந்த சாசனத்தில் உள்ளது.


"சட்டப்படியான பிரட்சினைகளுக்கு சட்டபடியே தீர்வு காண வேண்டும்"

இதையேதான் மனு-ஸ்ம்ரிதி, அர்தசாஸ்த்ர, கமண்டக-நீதி எல்லாம் "மத்சய நியாயம்" என்று கூறுகிறது.

ராஜியம் (ராஜாக்கம்) என்பது அரசு-ஆட்சி...  அதற்கு எதிர் சொல் "அராஜகம்" அரசு கட்டுபாடற்ற நிலை (Anarchy)... இந்த நிலையில் கை ஓங்கியவன் மற்றவறை அதிகம் சுரன்டுவான், வஞ்சிபான் என்பதே "மத்சய நியாயம்" Law of Fish/Jungle - Big Fish eats Small Fishes!!!

இந்திய அரசியலமைப்பை இன்று பலர் "நவீன-வேதம்" என்கின்றனர்!!
#ModernManu

Refer:

யதி ன ப்ரனயத் ராஜா தன்ட் தண்டேய்ஸ்வதந்திதா (தண்டிக்க படவேண்டியவன் சலிப்பின்றி அரசனால் தண்டிக்க படவில்லை என்றால்)
சூலே மத்ஸ்யானிவபக்ஷ்யன் துர்பாலன் பலவத்ரா (வலிமையானவன் எளியவர்களை விழுங்கிவிடுவான்)

(மனு-ஸ்ம்ர்தி 7.20)

https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc200682.html

Also Read: Ambedkar Speech (ConstituentAssembly/25th Nov 1949)
https://www.outlookindia.com/website/story/the-grammar-of-anarchy/289235

No comments:

Post a Comment