Wednesday, 5 February 2020

ஆன்மீகம்!! பிரிவினை யுத்தி!!!

"ஆறுகள் கடலில் சேர்வதில்லை" என்று அல்லது "கடலில் உள்ள நீர் ஆறுகளில் வந்தவை இல்லை" என்று இரு (முழுமையற்ற) உண்மைகளை/தரவுகளை வைத்து தீர்மானிக்கலாம்.

தரவு 1: ஆறுகளில் சேகரிக்க பட்ட நீர் சுத்தமாகவும் இனிமையாக இருந்தது.

தரவு 2: கடலின் நீர் உப்பு அதிகமாக குடிக்க உகந்ததாக இல்லை.

இந்த இரண்டும் உண்மை தான்... அனால் இடம்-காலம் அடிப்படையில் தற்காலிகமானது (Spatio-Temporal) மாற்றத்திற்குறியது.

நாம் பல நேரங்களில் இந்த இயல்பை மறந்து/மறுத்து... நாம் நம்பும் அனைத்தும் உறுதியானது என்றும் மறுக்கமுடியாதது என்றும் நினைகின்றோம். ஆனால் நாம் பேசுவது எல்லாம் மனிதனுக்கு ஊன்றுகோலாக கட்டமைக்க பட்டவை, புனைய பட்டவை. அது "ஒவ்வொருவரின்" நம்பிக்கை...  அதை பொதுமை படுத்த முடியாது... இதைதான் "எல்லா நதிகளும் கடலை தான் சேரும்" என்கிறார் விவேகானந்தர்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன்
சிவனோ, பெருமாலோ... சேயோனோ, மாயோனோ... எல்லாத்துக்கும் ஒரே காரணி... அது ஒவ்வொருவரின் "நம்பிக்கை".. அவ்வளவுதான்...
அது "தனிமனிதன்" சார்ந்தது.. பொதுமை படுத்த முடியாது என்பது என் கருத்து... "தன்" மீது நம்பிக்கை உடையவனால் "தன்னுள்" இறைவனை உணரமுடியும்...


"தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியம் ஆகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்"

ஹிந்து என்று ஒரு மதம் இல்லை... அனால் இங்கு உள்ள பழக்கம்... அனைத்து உயிகளிலும் "இறைவனை" உணரும் தன்மை "ஜீவ காருன்யம்" , பத்து லட்சம் சாமி கும்பிடும் மக்களுக்கு "ஈசா" வும் "ஏசுவும்" ஒன்றுதாம்.. "மாரி அம்மனும்" "மேரி அம்மனும்" ஒன்றுதான்... பிறப்பின் நோக்கம் அறிந்து மனித இன மேம்பாட்டிற்கு தானே "ஆன்மீகம்", தவிர்த்து "அரசியலுக்கு" இல்லை, "பிரிவினைக்கு" இல்லை... உலகில் "ஒரு கடவுள், ஒரு தேவன்" என்பவர்களே பல பிர்ச்சனைகளும், வன்முறைகளும் காரணம் என்பது வரலாற்று உண்மை!!

சைவத்திற்கு சிவன் தென்-நாடுடையவன்... அது போல மாயோன் திராவிட கடவுள், ராமன் வந்தேறி-ஆரிய கடவுள்?? உருவ-இயல்பு ஒப்பீடுகளில் இருவரும் விஷ்னுவின் அவதாரம் என்று பல குறிப்புகள் கூறுகின்றது!!
நாம் அவற்றை புனையபட்டவை என்போம்!!
குப்தர்கள் காலத்தில் இயற்ற பெற்ற "பாகவத புராணம்" மற்றும் ஜெயதேவரின் "கீத கோவிந்தம்" புத்தர் விஷ்னுவின் அவதாரம் என்கின்றது. இவை அனைத்தும் மனிதனால் உருவாக்க பட்டவை... "நம்பிக்கை" என்பது பொதுபடையான உண்மையாக முடியாது, ஒருவருக்கு மட்டுமே "உண்மையாக" இருக்க கூடும். அதாவது "என் நம்பிக்கை" எனக்கு உண்மை... "தங்கள் நம்பிக்கை" தங்களுக்கு உண்மை"... இந்த நிலையில் "மற்றவர் நம்பிக்கையை" குறை கூறுவது சற்றும் ஏற்புடையது இல்லை என்பதே என் வாதம்.

கும்பிடுறேன் சாமி

பார்பான் காலில் விழ சொல்றான் சொல்லிட்டு இன்று மாற்று சித்தந்ததில் நாம் வேறு ஒருவரை நிறுத்து காலி சேவிகின்றோம்!! என்ன பெரிய "மேன்னிலை" அடைந்து விட்டோம்??

ஆன்மீக மேன்னிலை என்பது எல்ல உயிரிடத்தும் அன்பு செலுத்துவது... அப்படியானால் காந்தியடிகள் கூறுவது போல "குற்றத்தை" தான் கண்டிக்க வேண்டும், அழிக்க வேண்டும்  "குற்றவாளியை" அல்ல...

ஜீவ காருண்யம் தான் ஆன்மீகத்தின் மேன்மை... பண உள்ளவர்க்கு மட்டும் யாகம், தீட்சை, ஆகமம் என்று அருள்வதில்லை ஆன்மீகம்!!

பிரிவினை சித்தாந்தம்
முதல்ல "சாமி இல்லை பூதம் இல்லை" சொல்லி அரசியல் செய்தார்கள்... இப்ப எந்த மொழியில் சாமி கும்பிடனும் சொல்லி புறப்பிட்டாங்க!!

நான் படித்த ஒரு சில விளக்கங்கள் வைத்தே இன்று முன் வைக்க கூடிய சித்தாந்தங்களை ஏற்க முடியவில்லை... பல கேள்விகளும், முரண்களும் காணமுடிகின்றது... நீங்க யார  குரு என்றோ, மகான் என்றோ சொல்லி காட்டினால் வணங்குவேன், காலில் சேவிப்பேன் அப்துல் கலாம் ஐயா போல... அதற்காக அவர்களின் கட்டு கதைகளை, கூற்றுகளை அவரவர் விருப்பத்திற்கு, கற்பனைக்கு சொல்லும் பிரிவினை கறுத்துகளுக்கு அடிமையாக ஒருபோதும் துதி பாட மாட்டேன்... "அறிவு" தான் தனி ஒவ்வொறுவருக்கும் முதல் கடவுள்... கேள்வி எழுப்பாது குருவை பின்பற்றிய சீடர் உயர் நிலையை அடைவது சாத்தியமில்லை!!

நிறைய விமர்சனம் உள்ளது மாற்று ஆன்மீக கருத்துக்களுக்கு... எனது குறைந்தபட்ச அறிவுக்கே அது நியாமானதாகவோ, நடுநிலையாகவோ சொல்லுவது எற்க முடியவில்லை என்றால், ஆழ்ந்த ஞானம் உள்ளவர்கள் விமர்சிக்கதானே செய்வார்கள்!!

என் தேடல் பெரும்பாலும் அரசியல்-பொருளாதாரம் குறித்ததாக இருக்கும் நிலையில், ஆன்மீகம் சார்ந்து இன்று "பிளவுபடுத்தும்" மாற்று கருத்துகளின் நோக்கம்-அரசியல் உணரமுடிந்தும், எதிர்த்து ஆதாரங்களோடு விடையளிக்க முடியவில்லை.

காரணம்:
கருத்துகளும் கருத்தாக்கங்களும்... கருவில் உள்ள குழந்தை போல... அதற்கு எல்ல உறுப்புகளும் வளர்ச்சியடைய சில காலம் தேவை... முழுமையான அறிவை பெறாது, நம்முள் எழும் ஐயபாடுகளை கலையாது "அடுத்தவர்" கருத்துக்களை "பிரசவிப்பது/பிராசாராம் செய்வது" ஏற்புடையதன்று!!

பெரியார் வழி ஆய்வுகளில் வேதம், வேதந்தம்

ஒரு ஓவியனை "ஒரு ஆண் ஆடையின்றி ஒரு பெண்ணின் மடியில் துயில்வதாக" படம் தீட்ட சொன்னால், அதை அவன் "அம்மா-பாசமாக" மாற்றுவதும் "ஆபாசமாக" மாற்றுவது அவனின் அறிவு நிலையை பொறுத்தது!!!
உலகத்துலயே ஒரே மொழி ஒரே இனத்தை சேர்ந்த மன்னர்கள் தனக்குள் பல காலம் போர்ரிட்டு தன் இன மக்களையே கொன்று குவித்தவர்கள் - சேர, சோழ, பாண்டியர்.... இதை குறைகள் சொல்ல முடியாது... காரணம், அவரவர் நிலத்தை மக்களை பாதுகாப்பது ஒரு மன்னர் கடமை.

அதுபோல தன் இனத்தை சேர்ந்த குற்றப்பின்னணி உடையவர்களை "தஸ்யூ" என்று ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் நிலையில் "தஸ்யூ" என்பது "திராவிடர்களை" குறிக்கின்றது என்பதும், இந்திரணின் "தசாயு-ஹத்ய" என்பது ஆரிய படையெடுப்பு என்று பயிற்றுவித்தவர்கள் முல்லர் & கால்டுவேல்.

சிந்து சமவெளி நாகரிகம் தமிழ் மக்கள் (அல்லது திராவிடம் என்றே கொள்வோம்) அப்படியானால் "பசுபதினாதர்" என்ற ஒரு உருவம் வழிபாட்டதாக குறிப்பு உள்ளது...அது "ரிக்-வேதம்" மற்றும் "யஜுர்-வேதம்" பல இடங்களில் "ருத்ரா", "பைரவ", "நிலகந்த", "பவாய", "பவலிங்காய", "சர்வலிங்காய" என்று குறிப்பிடுவதாக கூறப்படுகின்றது. கீழடி-வைகை நாகரீகம் சிந்து நாகரீகத்தின் தொடார்ச்சி என்றால் அந்த "பசுபதிநாதர்" தொடர்பும் கிடைக்க வேண்டும்... பார்க்கலாம். ராவணன் கதைகளில் பிராமனனாகவே காட்டப்பட்டாலும், வதம் செய்யப்படுகிறார்.


குறிப்பாக இந்த வேதங்கள் பல வேறு கால கட்டத்தில் பலரால் தொகுக்க பாட்டது என்பதும் கொள்ள வேண்டும்.

பெரியாரிடம் முரண் பட்டாலும் அவர் "ஆன்மீகவாதி" சித்தர்களின் கருத்துகளை செயல்படுத்தினார் என்றெல்லாம் கட்டமைக்கும் சத்யவேல் ஐயா போன்றவர்கள், மாற்று கருத்துக்கள் வந்தால் "நேரில் பார்த்தீர்களா?" என்று கேள்வி எழுப்புகின்றார்!!

முரண்களை கலைந்து உற்று நோக்குபவர், அறிஞர்... 30-40 ஸ்மிரிதிகள் இருக்க... ஹிந்து மதம் பெரிதும் பொருட்படுத்தாத "மனு-ஸ்மிரிதி"யின் ஓர்ரீரு பாடல் வரிகளை கொண்டு வாதிடுவது என்பது ஏற்புடையதாக இருக்குமா?

பெரியாரின் சில கட்டுரைகளை தெளிவாக படித்தலே தெரியும்... முழுமையற்ற கருத்துக்களை கொண்டு சித்தாந்தம் கட்டமைத்தவர் என்று புரியும்.... "அசுரன்" என்பதை சூத்திரன் என்று திரித்து கூறும் "பகுத்தறிவு" ஏன் "சூரன்" என்பதை அந்த சொல்லொடு இணைக்க தவறியது!!?

இதை தான் "பிரிவினை" சிந்தனை என்று விமர்சிகின்றனர்!!

No comments:

Post a Comment