Monday 28 December 2020

பம்பர் கார்டுகள் பாதசாரிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்!!

இதுபோன்ற பம்பர் கார்டுகள் பாதசாரிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று மனுதாரர் கூறுகிறார். (Nov 2020 - Madras High Court)

https://youtu.be/OmB27e68Suw

இந்த பம்பர் கார்டுகளின் காரணமாக மட்டுமே விபத்துக்களில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் எழுகின்றன. நவீன வாகனங்கள் அவை தாக்கத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் பயணிகள் மீதான தாக்கத்தையும் குறைக்கலாம்.

அத்தகைய பம்பர்களை நேரடியாக வாகனத்தின் சேஸ் அல்லது ஃபிரேமில் பொருத்துவதனால், விபத்தின் போது மனித உயிர்களின் மீதான தாக்கத்தையும் சேதத்தையும் இரட்டிப்பாக்குகிறது. விபத்துகளின் போது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், இதுபோன்ற பம்பர் கார்டுகள் ஒரு தாக்கத்தின் போது உயிர்காக்கும் ஏர் பேக்ஸின் செயல்பாட்டைத் தடுக்கும், என்றார்.

பல நாடுகளில், இதுபோன்ற பம்பர் கார்டுகள் கடந்த காலங்களில் பொலிஸ் இன்டர்செப்டர் கார்கள் போன்ற நியமிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, அவற்றின் வடிவமைப்பு மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதே ஆகும்.

எனவே, இதுபோன்ற அனைத்து பம்பர் கார்டுகளையும் தங்கள் வாகனங்களில் இருந்து அகற்ற அனைத்து பயணிகளுக்கும் நியாயமான நேரம் வழங்குமாறு மாநில போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அதிகாரிகள் கவனிக்கும்போது அவற்றை அந்த இடத்திலேயே அகற்ற வேண்டும்.

இதுவரை கொடுத்த விளக்கம், சுய புத்தியோ, சொல் புத்தியோ உள்ளவர்களுக்கு....

ஜனனாகத்தில் மாற்று கருத்து என்பது இயல்பு என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் மற்றவர்களை சங்கி என்றும், உ.பி.ஸ் என்றும் வசைபாடும் அறிவிளிகளுக்கு...

இந்த விளக்கத்தை பெரியார் மொழியில் சொல்வதாக ஓர் கற்பனை!!

அடேய் தற்குறி பசங்களா!!

அடேய் மென்டல்களா!!

கார்ல பம்பர் உங்க கார் சேதம் ஆகாம பாதுகாக்கும், விபத்துகளில் சிக்குபவர்கள் எலும்ப உடைத்துவிடும்.

ஏர்பேக் ஓப்பன் ஆகாது என்பது ஒரு காரணி... ஆனால் பெரும்பாலும் ஆர் பேக் உள்ள வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதில்லை...

அதிகமாக டிராவல்ஸ் வாகனங்களில் பெரும்பாலும் குட்டி யானை (Load Vehicle) களில் தான் பம்பராகள்  பொருத்தப்படுகிறது... டிரவல்ஸ் ஓனர்களின் அம்பானி மூளை... டிரைவர் பற்றியோ, எதிர் வருபவர் பற்றியோ அவனுக்கு கவலை இல்லை... தன் வாகனம் சேதமாகக்கூடது என்பதே முதன்மை!!

வெலக்கெண்ணைகளா, எந்த வாகனமாவது தொழிற்சாலையிலிருந்து வெளிவரும்போது பம்பரோடு வருகிறதா??அது கூடுதல் செலவு என்ற வாதத்தை வைத்தால், எந்த ஆடம்பரமான வாகனமும் கூட பம்பருடன் வருவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த நடவடிக்கை 2017 WHO பரிந்துரை பேரில் துவங்கப்பட்டது.... உங்கள மாதிரி முட்ட பசங்க மத்தியில ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய முடியாது....

இந்த வெங்காயங்கள் எல்லாம், விவசாய மசோத, இந்திய பொருளாதாரம், தடுப்பூசி மருத்துவம் பற்றி எல்லாம் பேசுவானுங்க!!

சாபக்கேடு.