Saturday 9 May 2020

மொழி உளவியல்: பிரிவினை யுத்தி

மொழியின் தோற்றம் மற்றும் மனித இனங்களில் அதன் பரிணாம வளர்ச்சியானது பல நூற்றாண்டுகளாக ஊகத்திற்கு உட்பட்டவை. நேரடி ஆதாரங்கள் இல்லாததால் இதனை படிப்பது கடினம்.


மானுடவியலாளர்கள் (Anthropologist) மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பேசுகிறார்கள். மொழியை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதுவது உண்மையில் யதார்த்தம்.

மொழி சார் வளர்ச்சி இயல்பானது, மரபு ரீதியானது & இது ஒரு மனிதன் தன் சமூகத்தின் வழி பெறப்பட்டது. மொழி இலக்கண, இலக்கியத்தை மட்டும் கடத்தாது, அது உணர்வுகளையும், கலாசார அம்சங்களையும் கடத்தும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் நாட்டுப்புறக் கதையாக இருந்தாலும் சரி, அன்றாட பேச்சுவழக்காக இருந்தாலும் மொழியும் கலாச்சாரமும் கைகோர்த்துச் செல்கின்றன.

தெரு கூத்துகளில் கடவுளாக வேடமிட்டு நடிப்பவரை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதுவே யோகி பாபு, நயன்தாரா என்றால் எதிர்ப்பு வருகிறது. அவரவர் அந்த வேடம் தரிக்கும் நோக்கத்தின் அடிப்படையும் இதற்கு முக்கிய காரணம், இது கலாசாரத்தோடு சார்ந்தது.

நீங்கள் வளர்ந்த இடத்தைப் பொறுத்து மொழி பேசுவது வேறுபடும். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் சில சைகைகள், வெளிப்பாடுகளும், உள்ளுணர்வுகளும் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சுருதி, ஒலிப்பு, பேசும் வேகம், முகபாவங்கள், சைகைகள் மற்றும் தயக்க, சத்தங்கள் ஆகியவை மொழியோடு தொடர்புடைய காரணத்தினால்  இவற்றை "துணை மொழி" Para-Language என்றும் கூறுகின்றனர். நாம் பேசும் மொழியை இது பெரிதும் பாதிக்கிறது. இதை நாம் இந்தியர்கள் "ஆங்கிலம்" பேசும் வேறுபாட்டின் வழி காண முடியும், மலயாளியின் ஆங்கிலம், தெலுங்கரின் ஆங்கிலம், இந்திகாரர்களின் ஆங்கிலம்... எல்லாம் வேறுபடும். நீங்கள் கவனித்திருக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்கள் சைகைகள் அல்லது பழக்கவழக்கங்கள் கூட மாறுவதை நீங்கள் காணலாம். அதனால் நீங்கள் Peter என்றோ, Scene Party என்றோ கூட அழைக்கப் பட்டிருக்கலாம்.

மொழியும் கலாசாரமும் பின்னி பிணைந்தது. மற்ற மொழியை, அவர் பண்பை, உணர்வை விமர்சிக்க யாருக்கும் தகுதியும் இல்லை உரிமையும் இல்லை.

ஆனால், இது தொன்றுதொட்டு எல்லா மொழி திரைப்படங்களில் செவ்வனே செய்ய பட்டு வந்ததும் வரலாறு!!

பி.கு.: ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் தெரிந்தவரின் பார்வையும் புரிதலும் விசாலமானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்!

பன்னிரண்டு ஆண்டகளுக்கு முன் ஒரு திரைபட சர்சையில் மனமுடைந்த நம்மவர், "காலச்சாரம்" என்பது மாற்றத்திற்குறியது என்று "தெளிவாக" விளக்குவதை காண்க!!


No comments:

Post a Comment