Friday 20 March 2020

முதலாளி பாசம்: ஞாயிற்றுகிழமை ஊரடங்கு!!!

மற்ற நாட்களில் அலுவலகம் அதை விட்டால் வீடு. ஆனால், ஞாயிற்று கிழமை... ஊரு ஊராக சுற்றி நோய் கிருமியை பரப்புவார்கள். வீடு, பூங்கா, சினிமா, கடற்கரை, கோவில்... தொற்று அதிகரிக்கும்.

காரணம், விளைவு, பாதிப்பு கீழே விளக்குகிறேன்.

மேலும் நிறுவனங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கை (Preventive Measures) எடுக்க முடியும். ஆனால், பொது இடங்களில் அதற்கான முன் எச்சரிக்கை, மக்கள் ஒத்துழைப்பு என்று பல சிக்கல்கள் உள்ளது....

முதலாளி பாசம் என்று நேரடியாக ஏதும் இல்லை...

"லாக்கவுட்" (Lockout) அறிவிக்கலாம்... போர்க்கால அடிப்படையில், தேசிய பேரிடர்-அவசரகாலம் அறிவிக்கலாம்.

ஆனால் அதற்குமுன் அதன் விளைவை, மக்களின் எதிர்வினையை கணக்கிட வேண்டும்...

பொருளாதாரம் தற்போது உள்ள நிலையில் (Slowdown Phase of Trade Cycle across the globe!!) இது இன்னும் கடுமையான இழப்பை ஏற்படுத்து...

உடனே அளவிலும் மக்கள் தொகையிலும் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத நாடுகளுடன் ஒப்பிட சென்றால் அங்குள்ள மக்களின்  பொருப்புணர்வையும் சேர்த்து ஒப்பிடவும்....

தொற்றை குறைக்க அவசியம்?? SOCIAL DISTANCING... இது என்ன என்பதற்கு முன் எதற்கு என்று யோசிக்க வேண்டும்...

இப்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 கிட்ட வந்தாயிற்று. இதனை இரவும்-பகலும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரிசோதனையாட்கள் (Screening Agents)... என்று பலர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்று அதிகரித்தால் இத்தாலி, சீனா போல, மருத்துவ சிக்கிட்சை அளிக்க ஆட்கள் குறைபாட்டினால் நாமும் "சிலரின்" வயது அதிகம், பிழைக்க வாய்ப்பு குறைவு என்று தரவரிசை படுத்தி (Medical Triage) அவர்களின் மருத்துவ சிகிட்சையை கைவிட நேரிடும்....

தொற்றை குறைக்கும் முயற்சி... To maintain Statusquo... குறைந்தபட்ச தற்போதய நிலையையாவது சமாளிக்க உதவும்... (Social Distancing: Flattening the Curve)
இந்த முயற்சி நினைத்தபடி நல்ல விளைவை கொடுத்தால் "லாக்கவுட்" அறிவிக்கலாம். ஆனால,
பொருளாதார இழப்பு அதிகாரிக்கும்... மீட்சியின் போது பலர் வேலையிழக்க நேரலாம்!!

இது எல்லாம் சாமனியனுக்கு விரிவா புரியவைக்க முடியாது... கை தட்டுங்க, வீட்டு குள்ள ஒளிந்து கொள்ளுங்கள் என்றால்... நோக்கம் அதுவல்ல...

இரயில் நடைமேடை நுழைவுசீட்டு ரூ.50 வைப்பது அதிகம் சம்பாதிக்கும் நோக்கமில்லை, நம்ம மக்கள் இயல்பு ஒருத்தர் வழி அனுப்ப 50 பேர் வருவாங்க!!!

தொற்றை தவிர்க்க ஒரு முன்னெடுப்பு.

நிறுவனங்கள் தான் நமக்கு வேலை கொடுத்து (Engine of Economy) மாதம் சம்பளம் தருகின்றது... அது அவர்களுக்கு தனிப்பட்ட இலாப-நட்டம் மட்டும் இல்லை... அதன் விளைவு (Spillover Effect) பொருளாதாரத்தை, நம்மை, சமூகத்தை தாக்கும்.

குறைந்த சேதாரத்தில் சில முயற்சிகள் பரிசோதிக்கப்படும் (Experiment). இந்த நடவடிக்கையே நாம் இன்னும் துரித செயற்பாடுகளில் தவிர்த்திருக்கலாம்... இப்பொது உள்ள நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் "அமைப்பு சார" தொழில்களை, பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்து உள்ளது என்பது உண்மை....

இந்த பரிசோதனை விளைவை பொருத்து "லாக்கவுட்" அறிவிக்கலாம், நிறுவனங்கள் அடைக்கப்படலாம்...

அத்தியாவசியம் இல்லை என்றால் வெளியே சுற்றுவதை தவிர்போம்.... நோய் தொற்றை தவிர்ப்போம்...

முடிந்த அளவு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மருந்துவ பணியாளர்களின் சுமையை குறைக்க உதவுங்கள்.

சூழ்ச்சி கோட்பாடுகளை, வதந்திகளை பரப்புவதை நிறுந்துங்கள்,
அச்ச படவேண்டும், மற்றவர்களை அசுறுத்த வேண்டாம்.

மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்.
#JanataCurfew
22 March 2020 (Sunday)

No comments:

Post a Comment