Tuesday 7 April 2020

மிரட்டும் டிரம்ப்: உள்ளூர் ஆட்டகாரர்களின் வேடிக்கை!!

ஒரு நன்பர் கேட்டார்...

ட்ரம்ப் இந்தியாவை மிரட்ட வில்லையா??
"Retaliate" என்பது கண்ணியமற்ற வார்தையில்லை யா?? நாம் இரங்கி அடி பணிந்து போவதா??


முதல், பொறுப்பில்லாத ஒருவரிடம் நாம் எதையும் எதிர் பார்ப்பது நமது தவறு. (இத்தனை நாள் கேலி செய்த ஊடகம் இன்று சுயலாபதிற்காக மாற்றி பேசுகிறது)

இரண்டு, எதிர் வினை என்றால் வர்த்தகத்தில் தானே, இருக்க தான் செய்யும்.

மூன்று, நாம் நம் நிலையிலிருந்து தவராமல் பொறுமையோடு கண்ணியம் காப்பது நம் கடமை. (உலகமே நம்மை பார்த்து கொண்டிருகிறது)

அமெரிக்காவை எதிர்த்து ரஷ்யாவிடம் S400, ஈரான் யிடம் கச்சா எண்ணெய்,  பல இடத்தில் எதிர்த்து எதிர்த்து செயல்பட்டிருக்கின்றோம்.

இறுதியாக, ஒரு பாயின்ட் ஒடைக்கவா?? அது "அதிபர் ட்ரம்ப்" பயன் படுத்திய வார்த்தையே இல்லை....

ஒரு செய்தி நிருபர் கேட்கின்றார் "Are you worried about Retaliation, regarding export of Pharmaceutical goods like Indian PM decision?"

இருப்பினும்...  அவர் விளக்கத்தில் பயன்படுத்திய "நட்பு, சாதகமான நாடு, வர்தக இலாபமடைந்த நாடு"  என்ற வார்த்தைகளை விடுத்து கடைசி வார்த்தை "Retaliate" என்ற ஒரு வார்த்தை "எதிர் வினை/ விளைவு" அதுவும் ஊடகவியளாலர் கேள்வி அது, அதை மட்டும் பிடித்து கொண்டு மிரட்டலா என்று விவாதம், வட்ட மேசை மாநாடு நடத்த இவர்களால் மட்டும் தான் முடியும்.


நம்ம உள்ளுர் ஆட்டகாரங்க வேற லெவல்!!!

இதயும் தாண்டி வேற லெவல் ஃபன் இருக்கு... வீடியோ பாருங்க!!

---------
சுருக்கமாக:

20 மார்ச்: ட்ரம்ப் இந்த HCQ மருந்து COVID-19 எதிர்த்து நல்ல பலன் தரக்கூடியது என்று அறிவிக்கின்றார்.

அமரிகாவில் அதிக தேவை ஏற்படுகிறது (Demand -Supply)

இதில் உலகத்தின் 70% HCQ உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

இந்தியாவின் மாத உற்பத்தி 20 கோடி அலகுகள்.

22 மார்ச்: இந்தியாவில் "ஜனதா ஊரடங்கு" அதை தொடர்ந்து "லாக் டவுன்"

இப்போ சிக்கல், உற்பத்தி தடைபடுமல்லவா!!

25 மார்ச்: கையிருப்பு நிலையறியும் வரை HCQ ஏற்றுமதிக்கு தடை.

இதில் சில விதிவிலக்கு இருந்தது.

i) முன்கூட்டியே வெளியேறும் ஆணைகள் பெற்றவை.
ii)மனிதாபிமானத்தேவைகள்: வழக்கு வாரியாக
iii)சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (SEZ) உற்பத்தி

2 ஏப்ரல்: திருப்பம். அதுவரை
இந்தியாவில் குறைந்த அளவே இருந்த  COVID-19 பாதிப்பு நிலை மாரியது. (டில்லி மாநாடு சர்சை)

5 ஏப்ரல்: HCQ ஏற்றுமதிக்கு தீவிர தடை.

அமேரிக்க இந்த இடைபட்ட (25 மார்ச் - 4 ஏப்ரல்) காலத்தில் அதிகம் முன் பதிவு செய்துவிட்டது.

6 ஏப்ரல்: நமது கையிருப்பு, மற்றும் உற்பத்தி சாத்தியங்கள் அளவிடபட்டு, இந்திய அரசு தடையை தலர்த்த முடிவு செய்தது.

10 கோடி உற்பத்தி உறுதி செய்யப்பட்டது. COVID சிகட்சைக்கு தல ஒருவர்க்கு 14 மாத்திரைகள் தேவை. இதை கொண்டு 70 லட்சம் பேருக்கு சிகிட்சை அளிக்கலாம்.

7 ஏப்ரல்: வெளியூர் ஆட்டகாரனின் குதர்கமான கேள்விக்கு கதையின் நாயகன் ட்ரம்ப் உளர... நம்ம உள்ளூர் ஆட்டகாரர்கள் அதை வைத்து ஒருநாள் பொழுதை கழித்தனர்.
--------

திரு. ஆர்.ஸ்.பாரதி குறிப்பிட்டது போல சில ஊடகங்கள் செய்வதை என்னவென்பது??

ட்ரம்ப் "எங்கள் விநியோகத்தை வெளியே வர அனுமதித்தால் நாங்கள் பாராட்டுவோம் என்று நான் சொன்னேன், அவர் அதை வெளியே அனுமதிக்கவில்லை என்றால், இருக்கட்டும், ஆனால், எதிர் வினை தானே? இருக்கலாம்,இல்லாமல் என்ன?”

இத்தனை நாள் உலகத்தை ஆட்டுவித்த வளர்ந்த நாட்டின்  "பொறுப்பற்ற கோமாளி" தலைவனாக பார்க்கப்பட்ட அமேரிக்க அதிபர் திடீறென்ரு இன்று ரனகல வில்லனாக சித்தரிக்கப்படுகிறர்...
"மிரட்டுகின்றார்" ( Retaliate என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு)

இவர்களின் அரசியல் பற்றுக்காக, சித்தாந்த சார்புக்காக, மக்களை, நேயர்களை, வாசகர்களை "எலிகலாக" மாற்றுவதா??

இதையே, நாம் நம் சமூக வளைதலதில், நம் நண்பர்களுக்கும், குடும்பத்தினர்க்கும்  செய்வது நியாயமா??

அறிவை வளர்த்து கொள்வோம்.

அரசியலுக்காக கட்டமைக்கபடும் கதைகளை, உணர்ச்சியை தூண்டும் ஆதாரமற்ற கேலி படங்களுக்கும், பொய் செய்திகளுக்கும் நம் அறிவை அடமானம் வைத்துவிட வேண்டாம்....

#EducateYourself #StopPoliticization

சர்சயை தெளிவாக புரிந்துகொள்ள கனிசமான சான்றுகளை  தேடி படிக்க கற்று கொள்வோம்..

ஆதாரப்பூர்வ மாற்று  கருத்துக்களையும் பதிவிடுங்கள்....

நம் ஒற்றுமையை பரைசாற்ற #9baje9Minute தீபம் ஏற்றுங்கள் என்று பாரத பிரதமர் அழைத்தபோது, உ.பி. மாநில பா.ஜா.க. மகளிர் அணி தலைவர் "வான் நோக்கி துப்பாக்கி சூட்டிலீடுபட, காவல் துறை வழக்கு பதியப்பட்டுள்ளது"

"உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்"என்கிறார் அவர்..

Emotion vs Intelligence

மனதிற்கும் அறிவுக்கும் எப்போதும் ஒரு போராட்டம் இருக்கும்.

Emotion (உணர்ச்சி) - இது எளிதாக ஒருவரை செயல்பட வைத்துவிடும்... ஆம் கோபம், அழுகை, வெறுப்பு, அன்பு எல்லாம்.

Intelligence (அறிவு) -  அது எப்போதும் முட்டுக்கட்டை போடும், கேள்வி கேட்கும், நல்லதா?? நமக்கு தேவையா?? என்ன இலாபம்?? என்றெல்லாம்.

பெரும்பாலம் அறிவின் கட்டளையில் உள்ளவர்கள் எதிலும் சட்டென்று முன்வருவது கடினம், தீர்க்கமான முடிவு, தெளிந்த பதில் கிட்டிய பின்னே காரியத்தில் இரங்குவர்.

ஆனால், உணர்ச்சி வசபட்டவர்கள் இலாப-நட்டம் பாராமல், பின் விளைவுகளை கணிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுபர்.

நேற்று என் அனுபவம்,
"தீபம் ஏற்று" என்றதும் அதை தாண்டி என் வீட்டருகே பொறுப்பற்ற சிலர் வெடி வெடித்தார்கள். அந்த தீப்பொறி உணர்ச்சி வசப்பட்ட சிறு பிள்ளைகள், "அண்ணா, உங்க வீட்டில் ஒரு  பெட்டியில் தீபாவளி பட்டாசு இருக்கு தாங்க என்றனர்".

யாரோ செய்வதை உணர்ச்சி வசத்தால் பின்பற்ற அறிவு எதற்கு??

உணர்ச்சி தூண்டும் சமூக வளைதல பதிவுகள் தாம் வெறுப்பை, வன்மத்தை, பிரிவினையை வளர்க்கின்றது...

நாம் எதையும் பொருட்படுத்தாமல் இதை அதிகம் பகிர்வதுண்டு... உணர்ச்சி தூண்டும் எந்த செயலை, செய்தியை, பதிவுகளை பார்த்தாலும் அறிவிடம் சரனடையுங்கள்.

இல்லையேல் இது போன்ற விளைவுதான் நேரிடும்!!

"தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியம் ஆகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்"

#StandOutoftheCrowd


-------------
We need #ReadingBetweenLines

Even many in the name of #FackCheck propagate their own Agendas....

#BeRational
#StopHatredness

Don't be a carrier of Neither Corona Nor Propagandas..

#StaySafe
#SaveMankind

No comments:

Post a Comment