Tuesday 8 June 2021

Vaccine Allocation Criteria: ஓரவஞ்சனை செய்யும் இந்திய ஒன்றியம்!!

 Reply to Respected Iyan Karthikeyan (YouTurn),

Regarding his "Biased and Irrational" Interpretations in the following video: https://www.youtube.com/watch?v=zYCzH8ZfGlw&t=5s 

FAct checKEr Anne!!

Your Analysis is Biased and Irrational (அதாவது பகுத்தறிவற்றதாக உள்ளது in your words) ஆம், இது பகுத்தறிவற்ற, ஒருசார்புடைய, நியாயமற்ற பகுப்பாய்வு.

Vaccine (தடுப்பூசி) - Administered to prevent the disease intensity. (Preventive Medication: a substance used to stimulate the production of antibodies.) It is not CURATIVE MEDICATION (Actions and treatments correcting a harmful or troublesome condition.)

Allocation of vaccine to states (Inter-State Equitable distribution) is based on Population size and Intensity of cases. That is Responsibility of Indian Union Govt. (இந்திய ஒன்றிய அரசு)Bharat Sarkar

Similarly, Intra-State distribution (i.e. among the Districts) should be based on the similar criteria. This is Responsibility of the respective State Government (மாநில அரசு எ.கா.: தமிழ்நாடு)

As per Liberalized Vaccination Policy (dated: 28 Feb 2021): The UoI from its share will allocate vaccines to States/UTs based on criteria of

1.     performance (speed of administration, average consumption)

2.     Extent of infection (number of COVID-19 cases).

3.     Wastage of vaccines would also be considered in the criteria and would affect the allocation negatively.

Based on the above criteria, a State-wise quota would be decided and communicated to the States/UTs in advance.



மக்கள் தொக்கையின் அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கபட்டுள்ளது என்று பார்த்தால், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கேரளா உடன் ஒப்பிட்டால் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மிகவு பின் தங்கியே காணப்படுகின்றது.

உத்திர பிரதேசமா, கர்நாடகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் கிட்ட தட்ட 4000 அதற்கும் மேலாக தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளதை காண்க.

நம்மை விட மக்கள் தொகையில் குறைவான கேரளம், ஆந்திரம் கூட நம்மை விட அதிகமான தடுப்பூசி மையங்களை அமைத்திருப்பது தெரிகிறது.

மக்கள் தொகையில் நமக்கு சற்று சமமாக உள்ள குஜராத் மாநிலம் கூட நம்மை விட இரண்டரை மடங்கு அதிக மையங்களை அமைத்துள்ளது.

இல்லை, தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை பூகோல பரப்பலவோடு ஒப்பிட்டு பார்த்தால் கூட தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அந்திரா போன்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது.



இதனை இப்படி ஒப்பிடும் முறை சரியானதா என்று சற்று பகுத்துப் பார்த்தால் புரியும். தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏன் என்றால் அந்த முகாம்கள் ஒன்றுபோலவோ, ஒரே அளவினதாக, சமமான வசதிகளை கொண்டதாகவோ இருக்க வாய்ப்புகள் குறைவு.

Source: https://github.com/CSSEGISandData/COVID-19

மக்கள் தொகையையும் (Population Size), பாதிப்பின் அளவையும் (Intensity of COVID-19 Infection) அடிப்படையாக கொண்டே முதல் தவனை தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் உத்திர பிரதேசம் பெரியதாக இருந்தாலும் பாதிப்பின் அளவில் கேரள, மகாராஷ்ரம் நிலை சற்று மோசமாக இருந்தது தெரிகிறது. அதன் விவரம் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.


#Source: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715269

@Source: https://www.hindustantimes.com/india-news/covid19-vaccine-tracker-which-state-has-received-how-many-doses-so-far-101610593001839.html

$ Source: https://github.com/CSSEGISandData/COVID-19 

பின் இரண்டாவது அளவுகோளுக்கு வருவோம்.

“Speed of Administration” criteria எதன் அடிப்படையில் கணக்கிட முடியும்?

Data Source: https://dashboard.cowin.gov.in/

Phase I Vaccination முதல் கட்ட தடுப்பூசியானது சுகாதார பணியாளர்களுக்கும்(HCWs), முன்களப்பணியாளர்களுக்கும் (FLWs) செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த கட்டத்தில் தமிழ்நாடு தடுப்பூசி பணிகளில் மந்தமாக செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. அதற்கு முக்கிய காரணங்கள் தேர்தல், தடுப்பூசி எதிர்ப்பு பிரசாரங்கள், என்பவை குறிப்பிடதக்கவை ஆகும்.

Phase II Vaccination இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துதல் 45-60 வயது முதியவர்களுக்கு செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த கட்டத்தில் தான் தடுப்பூசி செலுத்துல் வேகம்பிடித்தது என்று கூறலாம். தேர்தல் நடந்த வாரம் சற்று பின்னடைவை பார்த்து பின் ஏப்ரல் மூன்றாவது வாரம் இது மீண்டும் வேகமெடுத்துள்ளது.

தடுப்பூசி செலுத்துதல் குறித்த நிலையை காட்டும் இந்த வரைப்படத்தை மற்ற மா நிலங்களின் நிலையையும் ஒப்பிட்டு நோக்கினால் ஒன்று தெளிவாக தெரியும். என்னவென்று பார்ப்போம்…

இந்த வரைபடம் காட்டுவது, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், கேரள போன்ற மாநிலங்களில் தடுப்பூசிகளின் மேலாண்மை நல்ல முறையில் இருந்தது தெரிய வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தடுப்பூசி செலுத்தல் நிலை தரவுகளை சற்று நோக்கினால் ஒரு விஷயம் புரியவரும், அதாவது ஜனவரி 16 துவங்கி பிப்ரவரி 27 தேதி வரையிலும் தமிழ்நாடு அரசு முதல்-தவனையில் (First Instalment of Vaccine) இந்திய ஒன்றியம் வழங்கிய தடுப்பூசிகளில் வெறும் 60% ஊசிகளை மட்டுமே பயன்படுத்தி இருந்தது. இதைதான் அவர்கள் “Speed of Administration” Criteria அளவுகோளாக கொண்டு மறு தவனை தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர்.

அது மட்டுமின்றி, தடுப்பூசிகளை வீனடிப்பது. இது ஒரு எதிர்மறை அளவுகோள். இது அளவுகோள் மூன்று (Wastage of Vaccine dose). தமிழ்நாட்டின் தடுப்பூசி மேலாண்மையை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், இதுவும் மோசம் தான். 

இப்போது உள்ள “விடியல்” அரசும், முன்பு இருந்த “வெற்றி நடை” அரசும் தான் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்றது என்பதே உண்மை. ஆட்சியில் இல்லாத போது தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புவதும், அரசியல் செய்கிறேன் – அவியல் செய்கிறேன் என்பதும், ஆட்சிக்கு வந்ததும் ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்தாமல் “மத்திய அரசா – ஒன்றிய அரசா” என்று வீண்விவாதம் செய்வதுமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் மக்கள் தொகைக்கோ, அதன் பூகோல பரப்பளவிற்கோ ஏற்ற தடுப்பூசி மையங்கள் கூட அமைக்கவில்லை என்ற இந்த நிலை கோவிட் தடுப்பூசி மேலாண்மையில் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அரசுகள் மோசமாகவும், கவனக்குறைவாகவும்  இருப்பதை புள்ளிவிவரம் காட்டுகின்றது.

இதனை சரி செய்யாமல், மத்திய அரசு (இந்திய ஒன்றியம்) பாரபட்சமாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டுவது நல்ல ஆட்சி முறையாகாது. 

ஒரு விஷயத்தின் காரண, காரணிகளை முழுவதுமாக ஆராய்ந்து, பாரபட்சமின்றி, பகுப்பாய்வு செய்வதே “பகுத்தறிவான, முரண்பாடற்ற” செயலாகும். 

மாற்று கருத்துக்கள் இருப்பின் தரவுகளுடன், நியாயமான தர்கத்தை முன் வைக்கலாம்.

சரி அடுத்த விஷயம்,

35,000 கோடிக்கு கணக்கு கேட்டாங்களா? அன்னே! இப்ப வரைக்கும் எவ்வளவு செலவாச்சு என்று 2 வாரத்துல கணக்கு சமர்ப்பிக்க தான் சொல்லிருக்காங்க.

"The Union Budget for Financial Year 2021-2022 had earmarked Rs35000 crores for procuring vaccines. In light of the Liberalized Vaccination Policy, the Central Government is directed to clarify how these funds have been spent so far and why they cannot be utilized for vaccinating persons aged 18-44 years", the Supreme Court observed.

இந்திய ஒன்றியத்தின் நிதி அறிக்கை (Budget 2021-22), இது ஒரு முழு நிதி ஆண்டிற்க்கானது (FY 2021-22) அதாவது 2021 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை தேவையான நிதி ஒதுக்கீடு. இது 12 மாததிற்கு ஆகும் செலவு. அப்படியானால் தற்ப்போது வரை 2 மாதங்கள் ஆகியுள்ளது (சராசரியாக வைத்தால், சுமார் 5800 கோடி வரை இதில் செலவு செய்திருக்கக்கூடும்).

வெளிப்படையாக கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து:

1. SII (Covishield கொள்முதல் முன்பணம் சேர்த்து): Rs. 3639.67 கோடிகள்.

2. BBIL (Covaxin கொள்முதல் முன்பணம் சேர்த்து): Rs. Rs. 1104 கோடிகள்.

3. Covaxin உற்பத்தி நிலைய மேம்ப்பாடு (BBIL - 3 Facilities): Rs. 200 கோடிகள்.

4. Phase 3 Clinical Trail (SII & BBIL): Rs. 11 +35 = 46 கோடிகள்.

இதில் மொத்தம்: Rs. 4989.67 கோடிகள் வருகிறது.

இப்போது உச்ச நீதி மன்றம் குறிப்பிட்ட “Arbitrary and Irrational” என்பதை பார்ப்போம்

”18-44 வயதினரும் அதிகம் பாதிக்கப்படும் இந்த நிலையில், அவர்களை மட்டும் பணம் செலுத்தி தடுப்பூசி பெறச் சொல்லும் கொள்கை நியாயமற்றதும், முரண்பாடானதுமாகும்” என்று உச்ச நீதிமன்ற சாடுகின்றது.

”Due to the changing nature of the pandemic, we are now faced with a situation where the 18-44 age group also needs to be vaccinated, although priority may be retained between different age groups on a scientific basis. Hence, due to the importance of vaccinating individuals in the 18-44 age group, the policy of the Central Government for conducting free vaccination themselves for groups under the first 2 phases, and replacing it with paid vaccination by the State/UT Governments and private hospitals for the persons between 18-44 years is, prima facie, arbitrary and irrational.”

பி.கு.: மாநில அரசுகளும் 2 வாரத்திற்குள்ளாக தங்கள் நிலை குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

Copy of Supreme Court Order: 

https://www.livelaw.in/pdf_upload/supreme-court-suo-moto-covid-case-order-may-31-394369.pdf 

இவை மூன்று விஷயம் முக்கியமாக பட்டதால் குறிபிட்டுள்ளேன். தாங்கள் கூறுவது போல தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சேது சமுத்திரம், சாகர்மாலா, எட்டு வழிச்சாலை, தொழில் பேட்டை திட்டங்களுக்கு முட்டுகட்டை போடும் இனவாத, மதவான, சுற்றுசூழலியல் வாதங்களை பின்னர் வேறு கட்டுரையில் காண்போம்.

No comments:

Post a Comment