Saturday, 9 May 2020

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில் (1)

இந்தியா: அரசியல் பொருளாதாரப் பார்வையில்!!
பாகம்: 1


”நாம் நாகரீக சமுதாயத்தில் வாழ்கிறோம்... ”


இதன் அர்த்தம் என்ன?
#CivilizedSociety

எந்த சமுதாயம், கட்டுப்பாடும், சுய ஒழுக்கம் கொண்டு, விதிகள், சட்டங்கள் கொண்டு திட்டமிட்ட ஒரு பாதையில் செல்கிறதோ அதுவே "நாகரீகமான" சமூகம்... மற்றவை "காட்டுமிராண்டி" விலங்குகள் போல வாழும் சமூகம்... #Unsustainable #Survival-of-the-Fittest

இத்தகைய கட்டுப்பாடு ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு காரணிகளால் கட்டமைக்கப்பட்டதை நாம் அறிவோம்...

1. மத கோட்பாடு, மத நம்பிக்கை: அக்னி, பிர்த்யு, வாயு தொடங்கி  சொர்கம்- நரகம், கர்மா, சரியத், பிலேஸ்பேமி, என்று உலகில் உள்ள எல்ல மத கருத்துகளின் அடிப்படையுமே மனிதனை நல் வழிப்படுத்துதலே!! (Religion and God-fear)

2. அரச கட்டளை: பாகுபலி படத்தில் இராஜ மாதவின் கட்டளையே சாசனம் என்ற கோட்பாடு போலதான் (King's Army or Police-State)

3. சட்டத்தின் ஆட்சி (Rule of Law and Constitutionalism)

4. சந்தை பொருளாதாரம் (Market Economy and Public Choice)


ஆமாம், இன்று சந்தைக்கு ஏற்றவாறு சட்டங்கள் திருத்தப்பட்டும், திட்டங்கள் வகுக்கப்படும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்...


சந்தை என்றவுடன் பெரும் முதலைகள், முதலாலித்துவம் என்று என்னிட வேண்டாம்.


“சந்தை” என்பது (Demand) தேவை (மக்கள்/ வாடிக்கையாளர்) அதற்கு ஏற்ற உற்பத்தி (Production) மற்றும் அளிப்பு (Supply), மக்களின் வாங்கும் சக்திக்கு (Purchasing Power) ஏற்ற விலை நிர்னயம் (Equilibrium Price), அதில் ஏற்படும் இலாபத்திற்கு (Profit) ஏற்ப முதலீடு (Investment), மறுபடி கட்டம் ஒன்று “தேவைக்கேற்ப உற்பத்தி”


இந்த சுழற்சியை நாம் அறிந்த செயல்படுவது அவசியம், இல்லையென்றால் மற்றவர்களின் கணகீட்டுகுள்ளே சிக்கிகொள்ள நேரிடும்!! சந்தை எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் (Public Choice), விளம்பரப்படமோ, விநியோகதார்களும் அல்ல!!


இதை செயல்படுத்த ஒவ்வொறு நாட்டின் சமுதாய, பாரம்பரிய, பழக்க வழக்கத்திற்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளது “அரசியல் அமைப்பு சட்டம்” Law of the Land (Constitution of India). இந்த தொடர் அப்படிபட்ட கருத்துகளை “அரசியல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் உங்களிடம் கொண்டு சேர்க்க முற்படுகிறது....



”அரசியல் பொருளாதாரம்" என்பது மார்க்சிய பொருளாதாரமாக (Marxian Economy) சில இடங்களில் கருதப்படும் அல்லது பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துறைக்கும் ஆலோசனையை (Policy Recommendation) குறிப்பிடப்படும். ஆனால், இந்த தொடரில் “அரசியல் பொருளாதாரம்” (Political Economy) என்பது ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அந்நாட்டின் சட்டம், நடைமுறை, அரசுமுறை அவற்றுடன் எப்படி இயங்குகிறது என்று அறிய முற்படுவதாகும்.

இந்த தொடரில் நாம் பல செய்திகளை தொட்டு பயனிக்க போகின்றொம்.....

1. இந்திய நாகரீகம்.

2. இந்திய அரசியலமைப்பு.

3. இந்திய பொருளாதாரம்.

4. இந்திய தத்துவங்கள்.


விவேகானந்தர் "இந்தியாவின் எதிர்காலம்" என்று மெட்ராஸ் மாகாணத்தில் நடத்திய உரையில்... மனு-ஸ்மிரூதி போன்ற பழமையான நீதி தொகுப்பு காட்டுமிராண்டி தனமும் கொண்டிருப்பது இயல்பு... அதை அப்படியே பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படுகிறது என்றும் அதுவே அவசியம் என்றும் கூறுகின்றார்.

இந்திய அரசியல் அமைப்பு 26.11.1949 அன்று நிறைவேற்றப்படுகிறது.

அதற்கு முன் தினம் அண்ணல் அம்பேத்கர் கூறுகின்றார், "இன்று முதல் காந்திய வழியான அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எல்லாம் மறந்துவிடுங்கள்... எல்லாவற்றிக்கும் தீர்வு இந்த சாசனத்தில் உள்ளது.

"சட்டப்படியான பிரட்சினைகளுக்கு சட்டபடியே தீர்வு காண வேண்டும்"

இதையேதான் மனு-ஸ்ம்ரிதி, அர்தசாஸ்த்ர, கமண்டக-நீதி எல்லாம் "மத்சய நியாயம்" என்று கூறுகிறது.

ராஜியம் (ராஜாக்கம்) என்பது அரசு-ஆட்சி...  அதற்கு எதிர் சொல் "அராஜகம்" அரசு கட்டுபாடற்ற நிலை (Anarchy)... இந்த நிலையில் கை ஓங்கியவன் மற்றவறை அதிகம் சுரன்டுவான், வஞ்சிபான் என்பதே "மத்சய நியாயம்" Law of Fish/Jungle - Big Fish eats Small Fishes!!!


யதி ன ப்ரனயத் ராஜா தன்ட் தண்டேய்ஸ்வதந்திதா

(தண்டிக்க படவேண்டியவன் சலிப்பின்றி அரசனால் தண்டிக்க படவில்லை என்றால்)


சூலே மத்ஸ்யானிவபக்ஷ்யன் துர்பாலன் பலவத்ரா

(வலிமையானவன் எளியவர்களை விழுங்கிவிடுவான்)

(மனு-ஸ்ம்ர்தி 7.20)

அதனால் தான் இந்திய அரசியலமைப்பை இன்று பலர் "நவீன-வேதம்" என்கின்றனர்!! Modern Manu Ambedkar


தொடரும்......

மொழி உளவியல்: பிரிவினை யுத்தி

மொழியின் தோற்றம் மற்றும் மனித இனங்களில் அதன் பரிணாம வளர்ச்சியானது பல நூற்றாண்டுகளாக ஊகத்திற்கு உட்பட்டவை. நேரடி ஆதாரங்கள் இல்லாததால் இதனை படிப்பது கடினம்.


மானுடவியலாளர்கள் (Anthropologist) மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பேசுகிறார்கள். மொழியை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதுவது உண்மையில் யதார்த்தம்.

மொழி சார் வளர்ச்சி இயல்பானது, மரபு ரீதியானது & இது ஒரு மனிதன் தன் சமூகத்தின் வழி பெறப்பட்டது. மொழி இலக்கண, இலக்கியத்தை மட்டும் கடத்தாது, அது உணர்வுகளையும், கலாசார அம்சங்களையும் கடத்தும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் நாட்டுப்புறக் கதையாக இருந்தாலும் சரி, அன்றாட பேச்சுவழக்காக இருந்தாலும் மொழியும் கலாச்சாரமும் கைகோர்த்துச் செல்கின்றன.

தெரு கூத்துகளில் கடவுளாக வேடமிட்டு நடிப்பவரை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதுவே யோகி பாபு, நயன்தாரா என்றால் எதிர்ப்பு வருகிறது. அவரவர் அந்த வேடம் தரிக்கும் நோக்கத்தின் அடிப்படையும் இதற்கு முக்கிய காரணம், இது கலாசாரத்தோடு சார்ந்தது.

நீங்கள் வளர்ந்த இடத்தைப் பொறுத்து மொழி பேசுவது வேறுபடும். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் சில சைகைகள், வெளிப்பாடுகளும், உள்ளுணர்வுகளும் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சுருதி, ஒலிப்பு, பேசும் வேகம், முகபாவங்கள், சைகைகள் மற்றும் தயக்க, சத்தங்கள் ஆகியவை மொழியோடு தொடர்புடைய காரணத்தினால்  இவற்றை "துணை மொழி" Para-Language என்றும் கூறுகின்றனர். நாம் பேசும் மொழியை இது பெரிதும் பாதிக்கிறது. இதை நாம் இந்தியர்கள் "ஆங்கிலம்" பேசும் வேறுபாட்டின் வழி காண முடியும், மலயாளியின் ஆங்கிலம், தெலுங்கரின் ஆங்கிலம், இந்திகாரர்களின் ஆங்கிலம்... எல்லாம் வேறுபடும். நீங்கள் கவனித்திருக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்கள் சைகைகள் அல்லது பழக்கவழக்கங்கள் கூட மாறுவதை நீங்கள் காணலாம். அதனால் நீங்கள் Peter என்றோ, Scene Party என்றோ கூட அழைக்கப் பட்டிருக்கலாம்.

மொழியும் கலாசாரமும் பின்னி பிணைந்தது. மற்ற மொழியை, அவர் பண்பை, உணர்வை விமர்சிக்க யாருக்கும் தகுதியும் இல்லை உரிமையும் இல்லை.

ஆனால், இது தொன்றுதொட்டு எல்லா மொழி திரைப்படங்களில் செவ்வனே செய்ய பட்டு வந்ததும் வரலாறு!!

பி.கு.: ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் தெரிந்தவரின் பார்வையும் புரிதலும் விசாலமானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்!

பன்னிரண்டு ஆண்டகளுக்கு முன் ஒரு திரைபட சர்சையில் மனமுடைந்த நம்மவர், "காலச்சாரம்" என்பது மாற்றத்திற்குறியது என்று "தெளிவாக" விளக்குவதை காண்க!!


Thursday, 7 May 2020

பகுத்தறிவு: 50% தள்ளுபடி!!!



ஆன்மீகம் என்பது எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மாவை காண்பது.

ஆத்திகம் என்பது எல்லா உயிர்களிலும் இறைவனை காண்பது.

மனிதம் என்பது இனம், மதம், மொழி கடந்து எல்லா மனிதனையும் காண்பது.

பகுத்தறிவு என்றால் கெட்ட வார்த்தையாக ஒரு குரூப் பார்கிறது, மற்றொன்று அதுக்கு அர்த்தம் தெரியாமலே கொண்டாடுது!!

காலக் கொடுமை!!!

பகுத்தறிவு என்றால் என்ன?

பிராமன எதிர்ப்பா!?

சமஸ்கிருத எதிர்ப்பா!?

வட மொழி எதிர்ப்பா!?

விதண்டா வாதமா!?

பெரியாரியமா!? இல்லை திராவிடமா!?


நியாங்களை, தர்க வாதங்களை "கண்மூடிதனமாக" மறுப்பதும் விமர்சனங்களை, விதண்டாவாதங்களை "கண்மூடிதனமாக" ஏற்பதும், பகுத்தறிவா??

எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டது, தீர்மானம் ஏற்றப்பட்டது என்று எதையுமே ஆராயாமல் யூகத்தின் அடிப்படையில் மட்டும் கேள்வி கேட்பது, பரிந்துறைகள் கூறுவது, பகுத்தறிவா??

பகுத்தறிவு என்பது உணர்ச்சிவசப்படாமல்  எல்லா கேள்விகளிலும் அறிவை காண்பது.

ஒரு விஷயத்த ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ போதுமான காரண-காரணி இல்லை என்றால் அமைதிகாப்பதும் பகுத்தறிவே!!

Thursday, 30 April 2020

மானமுமில்லை.... அறிவுமில்லை.....



இன்றை IT WING இதை எப்படி பயன்படுத்துகிறது என்றால்.... காலக் கொடுமை... எல்லோரும் இதை ஒரு STRATEGY உத்தியாக மாற்றி விட்டனர்....

அதாவது "மானமுள்ளவன்" நூறு என்ன ஆயிரம் பேர் வந்தாளும் சமாளிக்கலாம்....
அவன "சீ..சீ..." சொன்னலே போதும், எதிர்த்து மாற்று கருத்து சொல்ல அச்சபட்டு போயிருவான்...

அதையும் மீறி எதிர்த்து நின்றால், இன்னும் கொஞ்சம் ஆபாசமாக, கொச்சை படுத்துனா போதும்... வெற்றி வாகை நமக்கு தான்...

Every IT WING's STRATEGY!!

நாளைக்கு "சுய கட்டுபாடோ, ஒழுக்கமோ" இல்லாத உன் தலைவனின் வீடியோ/அந்தரங்கம் அவங்க கிட்ட சிக்கினா போதும்.... Breaking Point....  உன் தலைவன் அவங்க மெட்டுக்கு ராகம் பாடுவான்!!

நீ கண்ண மூடிட்டு உன் தலைவன பின் தொடருவது மிக பெரிய அபத்தம்.

"மானத்தை" பேரம் பேசி எவரையும் அடிபணிய வைக்கலாம்.... IT WING STRATEGY.... இது பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் நிலை.... தொண்டன்?? உனக்கு மானமில்லையா??

நம்ம எல்லோரும் இதே திசையில் பயணிக்க துவங்கிவிட்டனர்! காலக் கொடுமை!! ஒரு அரசியல் கொள்கையும் இல்ல, ஒரு பொருளாதார கொள்கையும் இல்லை.... தனி மனித தாக்குதல், கொச்சை படுத்துதல், வெறுப்பரசியல்.... வேறு ஒன்றும் தெரியாது!

நம்ம நம்புவது மட்டும்தான் உண்மை, அதை பேசுபவன் மட்டுமே அறிவாளி!!

இன்றைக்கு நீங்க சொல்கிற.. ஏதோ உ.பி., சங்கி, அடிமை, இரண்டு ரூபாய், 200 ரூபாய் எல்லாம்.... எல்லாம் கடந்து நிற்கிறான்.... அதான் நீங்க சொல்வது போல "முட்டு கொடுக்குறான்" ஆம், தன் பக்கம், தன் தலைவன் பக்கம் தவறு இருந்தாலும், அதை நியாய படுத்த விடா முயற்சி செய்யும் (i.e. மானம் கெட்ட) மனநிலை!! சித்தாந்த தவறுகளை விட்டு கொடுக்காமலிருபது கூட பரவாயில்லை, தலைவர்கள் யார்? அவரும் மனிதர்கள் தானே, தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா என்ன??

ஆனால் இவன் "அறிவு" வசத்தில் வாதிடுகிறானா இல்லை "உணர்ச்சி" வசத்தில் வாதிடுகிறானா!? என்பது தான் கேள்வி....

"அறிவின்" வசபட்டவனுக்கும், "உணர்சியின்" வசபட்டவனுக்கும் உள்ள வேற்றுமையை இந்த காட்சியில் நன்றாக அமைத்துள்ளனர்!!


உணர்ச்சியின் வசத்தில் உள்ளவனை சுலபமாக கைகூலியாக பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது.

Armchair Revolutionary என்ற சொல்லாடல் 20 ஆம் நூற்றாண்டுகளில் புழக்கத்திலிருந்தது. இவர்கள் தன் கறுத்துகள் மற்றும் எழுத்துகளின் மூலம் கிளர்சிகளை, புரட்சிகளை உண்டாகினர். அது நிறையவே அறிவு சார்ந்ததாக இருந்தது.

இப்போது 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் Mouse Click Revolutionary என்று கூறலாம், இவர்கள் IT WING வழியாக அர்த்தமற்ற அரைகுறை கறுத்துகளால் மக்களை குழப்பி ஆட்சி மாற்றம் கொண்டு வருகின்றனர். அதை சுமக்க பெரிய "சுய அறிவற்ற" கழுதை கூட்டமே இருக்கிறதே!!

பொதுவாக இரண்டு பெரிய கட்சிகள் தாம் மாற்றி மாற்றி ஆட்சி பொருப்பில், அரசியல்-பொருளாதர கொள்கையில் பெரிய மாற்றமின்றி ஆளப்போகிறது.

இதை ஆதரித்து நிற்கும் இருவேறு முட்டாள் கூட்டம் தான் மாற்றி மாற்றி "ஜனநாயகத்தை" தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது.

எனக்கு இந்த பொய் கலந்த உண்மையும் சரி, உண்மை கலந்த பொய்யும் சரி.... எல்லாம் ஒன்று தான்...

மரிதாஸ் இருக்கட்டும் ஜெயரஞ்சன் இருக்கட்டும் யார் அடித்து விட்டாலும் பொய் பொய் தான்... மதுவந்தி பேசினாலும் தமிழன் பிரசன்ன பேசினாலும் அநாகரீகம் அநாகரீகம் தான்... மாற்று அரசியல் சீமான் பேசினாலும் கமல் பேசினாலும் அதன் அடிபடையில் விமர்சனம் மட்டும் தான் இருக்கு....

இதை நீ உணரும் போது உன் அறிவு மற்றவரை உ.பி. யாக, சங்கியாக, அடிமையாக பார்காமல்... மனிதனாக பார்க கற்றுதரும்!!

கறுத்துக்களை எதிர் கறுத்து கொண்டு விமர்சிக்க கற்றுகொள்ளுங்கள்!!

விதை ஒன்று போட்டல் சுரை ஒன்றா காய்கும்!!!

ஏதோ ரூ.2, ரூ.200 சொல்கிறார்கள்... இந்த ஆண்டவர்-அடிமை சந்தை நிலவரம் பற்றி First Hand Experience எனக்கு இல்லை.... விலை பேசி கூலி வாக்குபவர்கு மட்டுமே உண்மை நிலை தெரியும்....

பெரும்பாலும் IT WING யின் நோக்கம் Echo Chamber களை உறுவாக்கவது மட்டுமே!!

இவங்க பதிவிடும் 2 Minute மீம்ஸ்கள், 10 Minute வீடியோ... வேகமாக பரப்ப... கூலி அவசியம் இல்லை நம் முட்டாள் தனமும், உணர்ச்சி பெருக்கும் தான் இவர்களின் முதலீடு!!

எல்லாம் அறிவு பூர்மா தோனுது ஆனால் குழப்பமாகவும் இருக்கு....அதில் படைப்பாற்றல் இருக்கும் ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் தான் அதிலிருக்கும் முடாள்தனம் விளங்கம்....

அதேதான் அப்போ, மீம்ஸ் போடுகிறவன் ஐஞ்சுகோ, பத்துகோ பிழைத்து கொள்கிறான். அதை உணர்ச்சி வயத்தில் Share செய்து சுமக்கும் "கழுதைகள்" தாம் அரை வாங்குது!! இவனா எதையும் படித்தும் பார்க்க மாட்டான், தேடியும் பார்க்க மாட்டான்.... 

IT WING யுத்தி மக்களை சுயமாக சிந்திக விடாமல்... உ.பி., சங்கி, தம்பிகள், ஆண்டவர் அடிமை, என்று இனம்கண்டு Echo Chamber உறுவாக்குகிறார்கள். அங்கு ஒரே "பொய்யை" மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாக சொன்னால் ஒரு அறிவீன கூட்டத்தை நம்ப வைக்க முடியும் என்ற யுத்தி கையாளப்படுகிறது!!

இந்த Echo Chamber களை தகர்த்தாலொழிய சுய அறிவோ, முன்னேற்றமோ சாத்திமில்லை....


சாமானியன் மொழியில் பேசினால்தான் கொஞ்சமாச்சு "பகுத்தறிவு" வளர்க்க முடியும் என்பது வரலாறு....

மறுக்கவில்லை...

ஆனால், அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்டாமல், அவர்களை ஒருமையில் பேசுவது, பெயர் வைப்பது, கொச்சை படுத்துவது... எது போன்ற மனநிலை!!?

இலக்கு ஒன்றாக இருப்பினும், சரியான காரண-காரணிகளோ, நியாயமோ, தீர்வோ இல்லாத ஒருவரை ஆதரிப்பது "முட்டாள்" தனமே!!

Wednesday, 29 April 2020

FORCE 1.0: கொரான தாக்கம் & பொருளாதார மீட்பு!!!

இவங்களே மக்களிடம் கருத்துக்கள், அலோசனை கேட்பாங்கலாம்....

 FORCE 1.0 (Fiscal Options & Response to COVID-19 Epidemic)


43 பக்க பரிந்துரையை படிக்க..
https://drive.google.com/file/d/1MmHbWhSQPH3LWJLvwlGAC2_zN6Pm6v2u/view

ஆலோசனை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்கலாம்...

//As the nation went into a strategic and defensive huddle, 50 plus young officers of Indian Revenue Service (IT) came together to leverage their combined knowledge, expertise and love for India and find some more solutions, suggestions and options that will help with the treatment for the economic pain that the country is suffering. Focusing thoughts and efforts on their domain knowledge and expertise, this volunteering initiative tried to identify actionable areas to mobilise revenue while protecting taxpayers’ welfare as a fiscal policy response in general and response of direct taxes administration in particular.//


அதிகாரியாக கருத்து/அலோசனை கூறும் உரிமை இல்லையா என்று கேள்வி எழலாம்...

1. தனிநபராக ஒரு இராமசாமியாக, கந்தசாமியாக கருத்து கூறலாம். ஆனால், எந்த "அடையாளத்தின்" போர்வையில் கொடுக்கிறோம் என்பது தான் சிக்கல்.... கடுதாசி கட்சியின் (Letter-Pad Party) தலைவராக கருத்து கூறுவது பிரட்சனை இல்லை, ஆனால் அரசு அதிகாரியாக அரசின் நோக்கத்தை பிரதிபளிக்கும் இடத்திலிருந்து இதை செய்யக்கூடாது.

2. ஆலோசனை கூறுவதன் நோக்கம், நல்லது நடக்க வேண்டும் என்பதா? இல்லை... குழப்பம் உண்டாக்குவதும், சுய விளம்பரமா என்று ஆராய வேண்டி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். உண்மையில் தீர்வை தேடுபவன் முதல் அதற்கான நல்ல வழிமுறையை (Modus Operandi), நெறியை கையாளுவான் என்பது குறிபிடதக்கது.

3. நடத்தை விதிகளின் (Civil Service Conduct Rules) கீழ் உள்ள முக்கிய விதி: ஒவ்வொரு அரசு ஊழியரும் எல்லா நேரங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும், கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த சூழலிளும்  தன் பணி தகுதியை இழக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

இறுதியாக, இந்த 50 IRS அதிகாரிகளின் FORCE 1.0 அறிக்கையை Leninist Socialist Economic Draft என்று மூத்த பத்திர்க்கையாளர் திரு.சேகர் குப்தா விமர்சிக்கின்றார்.


ஆனாலும் அவர்கள் கூறிய கறுத்துகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க.... நாம் தெரிந்து கொள்ள வேண்டியது...

1. Liquidity Trap: பணவாட்டம், போதிய மொத்த தேவை இல்லாதது அல்லது போர் போன்ற பாதகமான நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளும்போது  கையிருப்பு பணமிருந்தும் (மேல்தட்டு மக்கள்) முதலீடு/செலவு செய்ய நல்ல ஆதாயமான சூழலுக்காக காத்திருப்பர் இதனால் பணப்புழக்க தட்டுபாடு ஏற்படுகிறது.

//Just like it was done in the case of LPG subsidy where many well off people voluntarily surrendered their LPG subsidy benefits, the tax department can encourage the super rich and those willing, to give up at least one tax subsidy/tax deduction/ tax concession for only a year- for e.g. an individual could voluntarily opt for giving up his/her 80C deduction for a year.//

//A new scheme to mobilize fund collection for Corona relief can be created wherein Individuals and HUF can be given additional deduction for Investment made in the fund upto Rs.2,50,000 just like investment under section 80C. The amount invested will have a lock-in period of 5 year and will generate interest income for the investor based on what government pays for various small scale saving instruments. Section 13A and 13B may be amended to allow Political Parties and Electoral Trust to invest in the aforementioned fund. This will help the government mobilize funds while allowing these entities to save while earning interest income.//

2. Helicopter Money: மந்தநிலையின் போது அல்லது வட்டி விகிதங்கள் பூஜ்ஜியமாக வீழ்ச்சியடையும் போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக, பொதுமக்களிடையே "புதிய பணம்" அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும்.

//By all accounts, the greatest economic brunt of Covid-19 will be borne by the poor and low-income earning segment of our population. Therefore, the government’s primary focus should be on providing income support, especially to the underprivileged segments such as daily wage workers, migrant labourers, and the like. For the tax-paying population, the government needs to boost household consumption expenditure to boost demand, for which tax provisions that incentivize savings may need to be tweaked. Among corporates, the small and medium enterprises segment (SME) would be the hardest hit. This sector is also important from the perspective of job creation and retention of existing jobs in this period. But as we all know – Kosha Muloh Dandah. Such a large scale expansion of mandate will need to be financed, and that will require revenue. Tax revenues – both direct and indirect – are expected to take a substantial hit due to the loss of economic activity (for a detailed revenue impact analysis, see section on “Revenue Impact Analysis”.//

3. Stimulus: Fiscal Stimulant என்பது பொது செலவினை அதிகரிப்பது அல்லது வருமான பகிர்வு செய்வது அல்லது வரிகளை குறைப்பது குறிக்கிறது. Monetary Stimulus என்பது வட்டி விகிதங்களைக் குறைத்தல், Quantitative Easing அல்லது பணம் அல்லது கடனின் அளவை அதிகரிக்கும் பிற வழிகளைக் குறிக்கிறது.

//Moreover, the non-compliance behavior is entrenched in the taxpayer population and they carry forward it for longer time before turning to compliant. It is also difficult to regain the tax base in a rebounding economy. If it is unchecked, there is substantial revenue foregone and unfair competitive advantage for the non-compliant companies. There should be provision for transparent, adequate fiscal stimulus in a rule bound manner. So, there should not be systemic encouragement of tax non-compliance. The relief measure should be restricted to the honest compliant taxpayers, especially to those filing the return.//

//Ministry of health & family welfare can use a significant portion of Rs. 67,111 crores budgeted for the whole year in the first quarter of Q1’2020. The Covid stimulus package announced by the Government of India thus far amounts to 0.8% of GDP. Prima facie, this pales in comparison with 11% in the case of US, 15% in the case of UK, and 16% in the case of Malaysia. However, India’s Covid stimulus package was not the end, it was just the beginning. If additional revenues can be mobilized through some of the steps proposed above, the Government will have the legroom to significantly expand the scope and size of the stimulus/relief package without making a huge dent on its fiscal deficit position.//

4. Main objective of Taxation policy is "Price Stabilization" ஒரு சிலரிடம் மட்டும் அதிக பணமிருக்க மறுபுறம் மக்கள் வறுமையில் வாட... இருவருக்கும் இடையே உள்ள வருமான இடைவெளியை குறைக்க பயன்படுத்தும் கருவி "வரி வதிப்பு".

//In terms of financing, there is a general consensus that the government needs to run a much larger fiscal deficit in the coming few years in order to revive economic growth. However, a very high fiscal deficit may make the government’s debt burden unsustainable, leaving it with very little fiscal space for further interventions whenever necessary. Accordingly, there should be an attempt to identify creative ways to mobilize additional tax and non-tax revenue, without in any way burdening the taxpayers.//


//In times like these, the so called “super rich” have a higher obligation towards ensuring the larger public good. This is for multiple reasons – they enjoy a higher capacity to pay with significantly higher levels of disposable incomes compared with the rest, they have a higher stake in ensuring the economy springs back into action, and their current levels of wealth itself is a product of the social contract between the state and its citizens. Most high-income earners still have the luxury of working from home, and the wealthy can fall back upon their wealth to cope with the temporary shock. In view of several European economists, taxing the wealthy would be the most “progressive fiscal tool”, as wealth is far more concentrated than income and consumption.//

5. Spill over effect of Public Investment: அரசாங்கம் செலவு செய்வதன் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்பது உண்மை ஆனால் அதற்கான காலமும சூழலும் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் Liquidity Trap நீடிக்கும்.

6. FRBM Act & Fiscal Deficit: அதன் செலவினங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் வருமானத்தில் பற்றாக்குறை. நிதிப் பற்றாக்குறையைக் கொண்ட அரசாங்கக்கொள்கை. இதனை தளர்த்துவது பற்றி திராஸிட பொருளாதார நிபுனர் திரு.ஜெயரஞ்சன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

//The ‘escape clause’ provided in the Fiscal Responsibility and Budget Management Act, 2003 was invoked already provided for FY 2020-21, allowing the Government to deviate from an earlier planned fiscal path and target a higher fiscal deficit. Also, as per the Medium Term Fiscal Policy Statement, the growth rate in direct taxes is expected to be 13.60% for FY 2021-22 and 13.80% for FY 2022-23.//

7. Google Tax or Equalization Levy: திசைதிருப்பப்பட்ட இலாப வரி, குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி விகிதங்களைக் கொண்ட பிற நாடுகளுக்கு தன் இலாபங்கள் அல்லது ராயல்டிகளின் திசைதிருப்பப்படுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பு/எதிர்பு நடவடிக்கை விதிகள் இவை.

//Rationalization of Equalization Levy: “Equalization Levy”, also known as “Google Tax”, was introduced by the Finance Act, 2016 on certain non-resident businesses on certain “specified services”, largely those providing advertisement space and services. The revenues are taxed at 6% on gross basis. Finance Bill, 2020 proposes to expand the scope of the “equalization levy” to include consideration received by e-commerce operators from e-commerce supply or services, and taxed at a rate of 2%. The Corona economy is largely a digital/online/e-commerce economy. The consumption of online services, especially web streaming services such as Netflix, Amazon Prime, Zoom, etc. and the increased dependence on online commerce has made this sector flourish. The increased business of these e commerce/ online streaming/ web services companies provides an opportunity to increase the said tax rates by 1%, i.e. from 6% to 7% for ad services, and from 2% to 3% for e commerce.//

இந்த சூழலில் FORCE 1.0 பரிந்துரைகளை உற்று நோக்குவது அவசியமே!!


Thursday, 23 April 2020

சுயமரியாதை சூரையாடும் ஃபார்வர்டு கலாசாரம்!!!



அதேதான், இங்கு பெருங்கூட்டம் தான் பார்க்கும் எல்லாவற்றையும் ஃபார்வேர்டு செய்துவிட்டு, ஸேர் செய்துவிட்டு தன்னை ஒரு அறிவாளியாக என்னி சிலிர்கிறது 🤦‍♂️

இதுனால கட்சியில் "வட்ட செயலாளர்" பதவியும் கிடைக்காது, "சதுர செயலாளர்" பதவியும் கிடைக்காது.... உங்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி சங்கி-மங்கி, ரூ.2 இல்ல ரூ.200 பட்டம்👨‍🎓👩‍🎓 கொடுத்து பெருமை பட வேண்டியதான்....

அதுவும் அந்த பதிவுகளை உருவாக்கிவருக்கே சமர்பனம்👨‍💻👩‍💻....

நாம் ஸேர் செய்யும் பதிவுகளை எதிர்தரப்பினர் கேள்வி கேட்கும் நிலையில்🤷‍♂️ நமக்கு இரண்டே வழிதான்...

1. எய்தவனை கேட்டுகொள் நான் வெறும் அம்பு தான்🤸‍♂️ என்று விளகுவது... அதாவது "பொதி சுமக்கும் கழுதை" போல!!!

2. "எல்லாம் எனக்கு தெரியும்" என்று நமக்கு நாமே அறிவாளி என்று என்னிகொண்டு செல்வது🚶‍♂️

குறைந்தபட்ச தேடலுமில்லை, சுயமாக சிந்திக்கும் அறிவும் இல்லை....

இப்படி நிலையற்ற அரசியல் சித்தாந்ததிற்காக, தலைவருக்காக நம் சுய மரியாதை இழந்து, தன்மானத்தை அடமானம் வைத்து, மதிபற்றவராக வீழ வேண்டாம்.....

எந்த செய்தியும் பகிரும்முன் C.R.A.P. Test செய்யுங்கள்!!

C.R.A.P. Test?



முதலில் 'C' Current - சமீபத்திய நிகழ்வா என்று பார்க வேண்டும்.

இரண்டு 'R' Reputable -  மதிப்பு, நம்பக தன்மையை உறுதி செய்ய வேண்டும்

மூன்று 'A' Authenticity, Author - எழுதுபவரின் சார்பு, சுயலாபதிற்காக, பதவி ஆசைக்காக கட்டுகதைகளை உருவாக்கும் "மேதைகள், அறிஞர்கள்" இங்கு உண்டு!!

இறுதியாக 'P' Purpose - அந்த கட்டுரையோ, பதிவோ, மீம்ஸ்கலோ... அதன் நோக்கம் பற்றிய தெளிவு வேண்டும்.


ஒரு எடுத்துகாட்டு இங்கே!!

இதோ... "Voice of South India" எனறு ஒரு சமூக வளைதல பக்கம்... சாலையோர காய்கனி வியாபாரிகள் தாக்கப்படும் காட்சி, இது குஜராத்தில் நடந்தது. அதற்கு அந்த காவல்துறை சார் ஆய்வாளர் பணியிடை நீக்கம செய்ய பட்டுவிட்டார்....

இது நடந்த நிகழ்வுதான், இதனை இந்த "Voice of South India" பக்கம் வெளியிடும் துவனியை பாருங்கள்....

"ரிலையன்ஸ் ஃப்ரஸில் மட்டும் தான் வாங்க வேண்டுமா?" என்று முடிக்கிறது... இங்குதான் "நோக்கத்தை" ஆராய வேண்டும். விளக்கம் வீடியோவில்....


எ.கா. 2
நல்ல முயற்சிகளுக்கு பாராட்டு.. #TheQuint



இதுதான் உண்மையில் #Verified or #FactCheck..... 
கற்றுக்கொள்வோம், தெளிவடைவோம்...

இங்கு நிறைய ஆ(டு)ட்கள், பொய் தகவல்களை உடைப்பதாக கூறிக்கொண்டு தன் அரசியல் சித்தாந்த பற்றுக்காக, ஆண்டவர்-அடிமை உறவுக்காக புதியதாக ஒரு பொய்யை பரப்புகின்றனர்...

உண்மையை அறிய "தேடல்" தான் மிக அவசியம் ஆனால் நம்ம ஆட்கள் பெரும்பாலும் "கற்பனையை" மட்டுமே பயன்படுத்துவர்!!!

Beware of #Propaganda
Be #Rational
#EducateYourself

எ.கா.3

Am completely against any kind of "Name Calling" or "Branding"

சுயமாக சிந்திகக்கூடிய எவரும் இந்த இழிவான காரியத்தை செய்ய மாட்டார்கள்... கருத்து சுதந்திரம் என்பது "கருத்துகளை மறுக்க/எதிர்க" மட்டுமே... தனிமனித தாக்குதல், கொச்சை படுத்துதல் என்று பயனிக்கும் "அறிவுக்கு" அது கண்டிபாக புரிய வாய்பில்லை!!

Here i mentioning few names, just for an understanding.... Apologizes....

அரபு நாடுகள் பற்றியும், மற்ற நாட்டின் கலாசார, பண்பாடுகளை காயபடுத்துவதாக, இனவாதம், மதவாதம் பேசும் வலதுசாரி அரைவேக்காடுகளே "சங்கிகளே" "பக்தாக்களே"....
#BeRational

இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சற்றும் கவலையின்றி... தன் அரசியல் சித்தாந்த அடிபடைவாதத்தில் சிலிர்த்து கொண்டாடும் இடது சாரி அரைவேக்காடுகளே "உண்டியலே", "உ.பி. தோழர்களே", "அர்பன் நக்சல்களே"...
#StopPoliticization

நாட்டோட இறையான்மை பாதிகின்றது பற்றிய அக்கரை இல்லை... உள்ளூர் அரசியலே தகுடுதித்தோம் நமக்கு, இதுல மானத்த வாங்குறானுங்க.... 
#AntiIndian


உங்களுக்கெல்லாம் "கைதட்டுங்க, விளகேத்துங்க" சொல்லி டாஸ்க் கொடுத்து பிஸியா வைக்கனும்... 

நம்ம அறிவுக்கு அவ்வளவு தான் தகுதி.... ஒருத்தனும் திருந்தமாட்டானுக!

படித்து மற்றவனுக்கு அறிவூட்ட வேண்டியவர்களே இன்று பொறுப்பற்ற சித்தாந்த அடிபடைவாதிகளாக இருப்பது காலத்தின் கொடுமை!!

என்னை பொருத்தவரை சுயமாக சிந்திக்க தெரியாத நீங்க எல்லோரும் ஓரினமே!!!
#Fundamentalist

அறிவை வளர்த்துகொள்வோம்... நமக்கு என்ன தெரியுமோ அதை செய்வோம்.... #SocialTrending என்ற போதையில் தொற்றை பரப்பாதீர்கள்.... 

Please, Keep Distance and Avoid Contagion!!!
#BeResponsible 
#StaySafe 

என்னோட அஜன்டா... நான் எப்போதும் சொல்வதுதான்....


Sunday, 19 April 2020

நம் இளைய பாரதம் "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்களால்" வழிநடத்தப்படுகிறதா?

இன்றைய தலைமுறை எப்படி வளர்ந்து வருகிறது என்பதை பார்த்தால்....

நம் பொருப்பும், கடமையும் கேள்விக்குள்ளாகின்றது....


#ScientificInquiry #Rationalism
என்றெல்லாம் பதிவிட்டாலும்.... தேடல் நம்மிடம் மிகவும் குறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியவில்லை... எந்த செய்தியையும் அறிவு கொண்டு சற்றும் சிந்திகாத ஒரு போக்கு நிலவுகின்றது.... #ReadingBetweenLines

சுய அறிவு என்பது... ஒரு விஷயத்தை ஆதரிக்கவோ-எதிர்க்கவோ போதுமான காரண-காரணிகளை ஆராய பொருமையும், புத்திக்கூர்மையும் வேண்டும்.

ஆனால் நாம்... எதுவாக இருந்தாலும்... இது சரியா-தப்பா... யாராச்சு பத்து நிமட வீடிவிலோ, 2 நிமிட மீம்ஸிலோ சொல்வதை நம்பி பின் செல்லும் அறிவாக உள்ளோம்....

கட்சியில் பதவி-பொருப்பு பெற போராடி கட்டுகதைகளை, வன்மத்தை, வெறுப்பை பரப்பி பிரபலம் அடைய என்னும் இந்த "Aspiring வட்ட செயலாளர் வண்டுமுருகன்கள்"
பின்னே செல்கின்றோம்....

இப்படி சுயநலம் பிடித்து மக்களின் சுய அறிவை குறைக்கும் இந்த கனவான்கள் தான் நம் நாளைய தலைவர்கள்...

அப்புறம் ஜனநாயகத்த குறை சொல்லாதிங்க!!!
#ThreattoDemocracy

விலகி இருப்போம், விழிப்போடு இருப்பாம்.

மாற்று சிந்தனை தவறில்லை, விமர்சனம்-குறைகூறுவது தவறில்லை.... ஆனால் "சுய அறிவை" சற்றும் பயன் படுத்தாமல் "கற்பனை, கட்டுகதைகள்" பின்னே செல்வது தான் ஆபத்து!!!


இலக்கிய விமர்சனம் செய்ய தன் "தகுதியை" வளர்த்துகொள்பவன் "நல்ல படைப்பாளி" ஆகிறான்... என்று திரு.ஜெய மோகன் அவர்கள் கூறும் கருத்து அரசியல்-பொருளதார  விமர்சனம் செய்பவர்களுக்கும்
பொருந்தும்.

முழு காணொளி இணைப்பில்.....
https://youtu.be/xwd2_JgiYzo

"மாற்று" அரசியல், "மாற்று" சித்தாந்தம், "நடுநநிலை"அரசியல் என்று களமிறங்கியவர்கள் எல்லாம் ஏற்கனவே இருக்கும் "சித்தாந்ததிற்கு" பங்கம் வந்துவிட கூடாது என்பதற்குதான் செயல்படுகிறார்கள் என்று தோன்றவில்லையா?

தனி நபர் விமர்சனம், கொச்சை படுத்துதல், ஆபாச விமர்சனம், தனிமனித தாக்குதல் என்று  எதிர் கருத்துகளை தகர்கும் உத்தியில் எந்த மாற்றமும் இல்லாத பழமைவாதியாகவே உள்ளார்கள் பெரும்பாலும்!! #Branding

பல காலமாக,  நம் செய்தி ஊடகங்கள் தினமும் இரவு "வட்ட மேசை விவாதம்" நடத்துவதே....

மக்கள் சுயமாக சிந்தித்துவிட கூடாது என்ற நற்றெண்ணத்தில் தான்!!

செய்திகளை, நிகழ்வுகளை சுயமாக ஒப்பிட்டாலே நமக்கு பிரட்சினையின் வேறும், கொள்கை முடிவுகளின் நியாயமும் புரிந்துவிடும்!!! #ReadingBetweenLines

Most of the #Biased Media today are just IMPOSING opinions rather EXPOSING the events....

It is easiest to OFFEND but very hard to DEFEND!!